‘முட்டாள் தனமா பேசாதீங்க’... இந்திய அணியை கொச்சைப்படுத்திய ஆஸி, கேப்டன்... முன்னாள் வீரர் விளாசல்!

மும்பை: இந்திய அணி குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்னை முன்னாள் வீரர் கடுமையாக விளாசியுள்ளார்.

கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

'காட்டடி' கெயில் vs 'கர்ணகொடூர' பொல்லார்ட் - ஐபிஎல்லில் 'முரட்டு' அடிக்கு யார் பாஸ்?

குறிப்பாக பிரிஸ்பேனில் 1988-ம் ஆண்டுக்கு பிறகு தோல்வியே சந்திக்காமல் இருந்த ஆஸ்திரேலியாவை, இந்திய அணி வீழ்த்தி அசத்தியது.

டிம் பெயின் விளக்கம்

டிம் பெயின் விளக்கம்

இந்த தோல்வி குறித்து தற்போது விளக்கமளித்த ஆஸி, கேப்டன் டிம் பெயின், இந்தியா அணிக்கு எதிராக ஆடும் போது, சவாலான ஒரு விஷயம் என்னவென்றால், ஒன்றுமே இல்லாத விஷயத்தை பெரிதுப்படுத்தி தேவையில்லாமல் கவனத்தை சிதறடிப்பார்கள். இந்த தொடரில் அதனால் தான் நாங்கள் தோற்று விட்டோம்.

சர்ச்சை கருத்து

சர்ச்சை கருத்து

இதற்கு சிறந்த உதாரணம், பிரிஸ்பேனில் முதலில் கொரோனா அச்சுறுத்தல்கள் அதிகமாக உள்ளதாக கூறி முதலில் இந்திய வீரர்கள் விளையாமாட்டோம் என்று சொன்னார்கள். பின்னர் அங்கு தான் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டி எங்கு நடக்கப்போகிறது என்ற குழப்பம் எங்களுக்கு ஏற்பட்டது. எனவே தேவையற்ற விவகாரங்களை பெரிதுபடுத்தி குழப்புவதில் இந்திய வீரர்கள் கில்லாடிகள் எனக்கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முட்டாள் தனமான கருத்து

முட்டாள் தனமான கருத்து

இந்நிலையில் இதற்கு பதிலளித்து முன்னாள் வீரர் சாபா கரீம், டிம் பெயின் கூறியது சிறுபுள்ளைத்தனமானது மட்டுமல்ல, மிகப்பெரும் முட்டாள்தனமான ஒன்று. அவர்களின் தவறுகளை மறைப்பதற்கு இது போன்ற முயற்சிகளை செய்து வருகிறார். சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகளுக்கு சொந்த நாட்டு அணிகள் தான் இதுபோன்ற கவன சிதறல்களை கொடுக்கும். இந்திய அணி பலமுறை அதை எதிர்கொண்டுள்ளது. ஆனால் டிம் பெயின் அப்படியே மாற்றிக் கூறுகிறார்.

பதிலடி

பதிலடி

ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கரே இந்திய வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள் என்பதை ஒப்புக்கொண்டார். அவர் தோல்வி குறித்து குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. ஆனால் திடீரென கேப்டன் பெய்ன் இப்படி கூறுவது ஆச்சரியம் அளிக்கிறது என சாபா கரீம் பதிலடி கொடுத்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Saba Karim Slams Tim Paine for his controversial ‘sideshow’ remark
Story first published: Friday, May 14, 2021, 19:22 [IST]
Other articles published on May 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X