For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிக்ஸ் அடிக்க திணர்றோம்.. உங்க "பேட்" கொடுங்க பாஸ்.. கேட்டு வாங்கிய வீரர்.. கண்டிஷன் போட்ட தோனி!

டாக்கா: விக்கெட் கீப்பராக தோனியின் செயல்பாடுகளுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. அவரது மின்னல் வேகம் அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட தோனியையே ஒரு வீரர் டபாய்த்து தப்பிப் பிழைத்தார் என்பது சுவாரஸ்யம்தானே.

Recommended Video

Sabbir Rahman has recalled a stumping miss from Dhoni

சர்வதேச கிரிக்கெட்டில் 829 டிஸ்மிஸல்களை வைத்துள்ளார் தோனி. அவரது மின்னல் வேக கீப்பிங் எதிரணியினரை பலமுறை நிலைகுலைய வைத்துள்ளது.

ஸ்டம்பிங், கேட்ச் வாய்ப்புக்கு ஏதாவது சான்ஸ் கிடைத்தால் தோனி அதை நழுவ விட மாட்டார். கப்பென்று பிடித்தும், அடித்தும் விக்கெட்டை சாய்க்காமல் ஓய மாட்டார்.

சச்சின் சார்.. என்னோட ஆட்டத்தைப் பார்த்தீங்களா.. சும்மா வெறித்தனம்.. அசத்திய சிறுமி!சச்சின் சார்.. என்னோட ஆட்டத்தைப் பார்த்தீங்களா.. சும்மா வெறித்தனம்.. அசத்திய சிறுமி!

வங்கதேச வீரர்

வங்கதேச வீரர்

இந்த நிலையில் வங்கதேச வீரர் சபீர் ரஹ்மானுக்கும், தோனிக்கும் இடையிலான ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து சபீரே விளக்கியுள்ளார். இதுகுறித்து சபீர் கூறுகையில், 2016ல் பெங்களூரில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது என்னை அழகாக ஸ்டம்ப் செய்து விட்டார் தோனி. இந்த நிலையில் கடந்த ஆண்டு அதாவது 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த இந்தியா -வங்கதேசம் இடையிலான டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போதும் தோனிக்கு அதே மாதிரியான சான்ஸ் கிடைத்தது.

தப்பினேன்

தப்பினேன்

ஆனால் இந்த முறை நான் வேகமாக கிரீஸுக்குள் வந்து விட்டேன். மின்னல் வேகத்தில் நான் வந்ததை தோனி எதிர்பார்க்கவில்லை. கிரீஸுக்குள் வந்த வேகத்தில் இந்த முறை உங்களுக்கு சான்ஸ் கிடையாது என்று நான் தோனியைப் பார்த்து சிரித்தபடி கூறினேன். அவரது முகத்திலும் புன்னகை என்றார் சபீர். அந்த பந்தை உண்மையில் லெக் ஸ்பின்னர் சஹல் போட்டார்.

முக்கிய திருப்புமுனை

முக்கிய திருப்புமுனை

பந்தை வாங்கி அடிக்க கிரீஸை விட்டு வெளியே போனார் சபீர். அந்த சமயத்தைப் பயன்படுத்தி ஸ்டம்ப் செய்யப் பார்த்தார் தோனி. ஆனால் வேகமாக திரும்பி தப்பினார் சபீர். இந்த சம்பவத்தைத்தான் தற்போது ஒரு பேஸ்புக் நேர்காணலில் பகிர்ந்துள்ளார் சபீர் ரஹ்மான். அந்தப் போட்டியில் சபீர் ரஹ்மான் 15 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். போட்டியின் முக்கியத் திருப்புமுனையாக அந்த ரன்களும் அமைந்தன.

சபீர் தோனியின் ரசிகர்

சபீர் தோனியின் ரசிகர்

சபீர் தோனியின் பெரிய ரசிகரும் கூட. உங்க பேட்டோட ரகசியம் என்ன. அதை எனக்குக் கொடுங்க என்றும் அவர் தோனியிடமே கேட்டுள்ளார். இது குறித்து சபீர் கூறுகையில், அவர் எதை அடித்தாலும் அது சிக்ஸருக்குப் பறக்குது. நாங்கள் எல்லாம் சிங்கிள் அடிக்கவே திணறுகிறோம். இதை தோனியிடமே நான் கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் "நம்பிக்கை".

தோனியின் நிபந்தனை

தோனியின் நிபந்தனை

இதையடுத்து உங்க பேட்டைக் கொடுங்க, அதை வைத்து இந்தியாவுக்கு எதிராக விளையாட வேண்டும் என்றேன். அதற்கு அவர் நான் பேட்டைத் தர்றேன். ஆனால் அதை வைத்து இந்தியாவுக்கு எதிராக விளையாடக் கூடாது என்று நிபந்தனை போட்டார். நானும் அதற்கு ஒத்துக் கொண்டேன். வேறு அணிக்கு எதிராக அந்தப் பேட்டை வைத்து விளையாட ஆவலாக காத்திருக்கிறேன் என்று கூறினார் சபீர் ரஹ்மான்.

Story first published: Monday, May 18, 2020, 14:39 [IST]
Other articles published on May 18, 2020
English summary
Bangladesh player Sabbir Rahman has recalled a stumping miss from Dhoni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X