For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'டபுள்' அடிக்கத் தெரியாது, 'டிரிபிள்' போடத் தெரியாது.. கபில் யாரைச் சொல்றார் தெரியுமா?

துபாய்: சச்சின் டெண்டுல்கர் மிகத் திறமையான பேட்ஸ்மேனாக விளங்கியபோதிலும் இரட்டை சதம், முச்சதம், 400 ரன்களை எடுக்கத் தெரியாதவராக இருந்தார். மும்பை அளவிலான கிரிக்கெட்டுக்குள்ளேயே அவர் மூழ்கிப் போய்க் கிடந்தார் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

சினிமா, கிரிக்கெட், அரசியல்.. இந்த மூன்று துறைகளில் தான் ஒருவருக்கொருவர் முகத்தில் அடித்தாற் போல விமர்சித்துக் கொள்வார்கள். பிறகு சிரித்துப் பேசிக் கொள்வார்கள். வெட்கமே பட மாட்டார்கள்.

கிரிக்கெட்டிலும் அப்படித்தான் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிப்பது அங்கு சகஜம். அந்த வகையில், சச்சின் டெண்டுல்கர் குறித்து கபில் தேவ் விமர்சித்துக் கருத்து தெரிவித்துள்ளார்... எதில் தெரியுமா.. "கலீ்ஜ்" டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில்தான்.

அந்தப் பேட்டியிலிருந்து...

அவர் திறமையை அவரே மதிக்கவில்லை

அவர் திறமையை அவரே மதிக்கவில்லை

சச்சின் திறமையை நான் விமர்சிக்கவில்லை. ஆனால் அவரே அவரது திறமையை நியாயப்படுத்தவில்லை. அவரால் முடியும் என்ற நிலை இருந்தும் கூட அதைச் செய்ய அவர் முன்வரவில்லை.

முன்னாடியே செய்திருக்கலாம்

முன்னாடியே செய்திருக்கலாம்

சச்சின் பலமுறை 200, 300, ஏன் 400 ரன் எடுக்கவெல்லாம் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அதைச் செய்யவில்லை அவர். அவர் செய்த சில சாதனைகளைக் கூட அவர் முன்கூட்டியே செய்திருக்க முடியும்.

மும்பை கிரிக்கெட்டில் மூழ்கி விட்டார்

மும்பை கிரிக்கெட்டில் மூழ்கி விட்டார்

மும்பை அளவிலான கிரிக்கெட்டிலேயே மூழ்கியிருந்தார் சச்சின். அதில் மாட்டிக் கொண்டார். சர்வதேச அளவிலான கிரிக்கெட்டுக்கு அவர் மாறவில்லை. இரக்கமே இல்லாமல் பேட் செய்யும் முறைக்கு அவர் மாரறவில்லை.

ரிச்சர்ட்ஸுடன் பழகியிருக்கலாம்

ரிச்சர்ட்ஸுடன் பழகியிருக்கலாம்

உள்ளூர் வீரர்களுடன் நேரம் செலவிட்டதற்குப் பதில் பேசாமல் அவர் விவியன் ரிச்சர்ட்ஸுடன் நிறைய நேரம் செலவிட்டிருக்கலாம். அது அவரது கிரிக்கெட்டுக்கு உதவியாக இருந்திருக்கும்.

செஞ்சுரி அடிக்க மட்டும் சச்சின் தேவையா?

செஞ்சுரி அடிக்க மட்டும் சச்சின் தேவையா?

பெரிய சாதனைகளைப் படைத்திருக்க வேண்டிய வரர் சச்சின். ஆனால் அவர் சதம் மட்டுமே அடிக்கத் தெரிந்தவராக வலம் வந்தார். இரட்டை சதம் போடுவது எப்படி, 300 ரன்களைக் குவிப்பது எப்படி, 400 ரன்கள் எடுப்பது எப்படி என்பது குறித்து அவர் யோசிக்கவில்லை.

ஷேவாக் மாதிரி ஆட வேண்டும்

ஷேவாக் மாதிரி ஆட வேண்டும்

என்னைக் கேட்டால், சச்சின் டெண்டுல்கர், ஷேவாக் மாதிரி ஆட வேண்டும் என்று நான் அறிவுரை சொல்வேன். டெக்னிக்கலாக சச்சின் நல்ல திறமையாளர். ஆனால் அதை சதம் போட மட்டுமே பயன்படுத்தியது துரதிர்ஷ்டவசமானது.

Story first published: Thursday, October 29, 2015, 15:52 [IST]
Other articles published on Oct 29, 2015
English summary
Former India captain Kapil Dev says the iconic Sachin Tendulkar "did not know how to make double hundreds, triple hundreds and 400 though he had the ability" to scale such peaks and was "stuck in the Mumbai school of cricket".
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X