என் மனதில் அவர் என்றுமே ஹீரோதான்....கிரிக்கெட்டில் 50 ஆண்டுகளை கடந்த கவாஸ்கர்.. சச்சின் நெகிழ்ச்சி

அகமதாபாத்: சுனில் கவாஸ்கர் குறித்து என் மனதில் இருக்கும் எண்ணம் என்றுமே மாறாது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கி இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது.

இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல்

இந்நிலையில் சுனில் கவாஸ்கரை தன் மனதில் நான் என்னவாக வைத்திருந்தேனோ அது என்றும் மாறவே மாறாது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

 கவாஸ்கர் 50

கவாஸ்கர் 50

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கடந்த 1971ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி தனது முதல் டெஸ்டை ஆடினார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் கவாஸ்கர் 774 ரன்களை எடுத்து அறிமுக தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

 ஹீரோ

ஹீரோ

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சச்சின், 50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் கிரிக்கெட் உலகில் ஒரு இடி இடித்தது. நாங்கள் அனைவரும் அவரின் ஆட்டத்தை பார்த்து வளர்ந்தோம். அவரை நான் ஹீரோவாக பார்த்தேன். அந்த எண்ணம் என்றும் மாறாது என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கவுரம்

கவுரம்

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் போது முன்னாள் வீரர் கவாஸ்கருக்கு நினைவு பரிசு அளித்து கவுரவித்தது பிசிசிஐ. இதனை பிசிசிஐ-ன் அதிகாரி ஜே ஷா கவாஸ்கருக்கு வழங்கி கவுரவித்தார்.

ரியல் ஹிரோ

ரியல் ஹிரோ

மொத்தம் 125 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கவாஸ்கர் 10122 ரன்களை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் இவரே ஆகும். மேலும் இவர் 108 ஒரு நாள் போட்டிகளில் ஆடி3092 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 27 அரை சதங்கள் அடங்கும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sachin's Tweet on Sunil gavaskar's 50th aniversery in Cricket
Story first published: Saturday, March 6, 2021, 15:50 [IST]
Other articles published on Mar 6, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X