For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் சொல்வது சரிதான் - வக்கார் யூனிஸ்

By Aravinthan R

மும்பை: ஒரு நாள் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்துவது “பேரழிவிற்கான சிறந்த வழிமுறை” என சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது நடந்து வரும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில், மிக அதிக ரன்கள் குவிக்கப்பட்டு வருகிறது. உச்சகட்டமாக இங்கிலாந்து அணி மூன்றாவது ஆட்டத்தில் 481 ரன்கள் குவித்து உலக சாதனை நிகழ்த்தியது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பல கிரிக்கெட் பிரபலங்கள் இந்த இரண்டு பந்து முறைக்கு அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரும் கூட இதை எதிர்த்துள்ளார்.

பேரழிவுக்கான சிறந்த முறை

சச்சின் தனது ட்வீட்டில், "ஒரு நாள் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தும் நடைமுறை பேரழிவிற்கான சிறந்த வழிமுறை. இரண்டு பந்துகளுக்கும் ரிவர்ஸ் செய்யும் அளவிற்கான நேரம் கொடுக்கப்படுவதில்லை. நீண்ட நாட்களாக இறுதி ஓவர்களில் முக்கிய பங்காற்றும் ரிவர்ஸ் ஸ்விங்கை நாம் காணவில்லை" என கூறியிருந்தார்.

சிந்தனையைத் தூண்டிய சச்சின்

சிந்தனையைத் தூண்டிய சச்சின்

இதுவரை இங்கிலாந்தின் உலக சாதனையை புகழ்ந்து வந்தவர்கள் எல்லாம் சச்சினின் இந்த ட்வீடுக்கு பிறகு சிந்திக்க ஆரம்பித்து உள்ளார்கள். இந்த இங்கிலாந்து - ஆஸ்திரலியா தொடரைப் பொறுத்தவரை, இரண்டாவது மற்றும் நான்காவது போட்டியில் இரண்டு அணிகளுமே 300 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்தன. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியாக 481 ரன்கள் குவித்தது. ஒரு நாள் கிரிக்கெட்டில் 500 ரன்கள் எடுப்பது சாத்தியமில்லை என்ற பலரும் கூறிய காலம் ஒன்று இருந்தது. ஆனால், இங்கிலாந்தின் ஆட்டதிற்கு பிறகு பலரும் விரைவில் 500 ரன்களை பார்க்கலாம் என கருத்து தெரிவித்தனர்.

வக்கார் யூனிஸும் எதிர்ப்பு

வக்கார் யூனிஸும் எதிர்ப்பு

அப்போதுதான் சச்சினின் ட்வீட் வந்து சேர்ந்தது. அவரது, கருத்தை ஆமோதிக்கும் வகையில், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ரிவர்ஸ் ஸ்விங் வித்தகருமான வக்கார் யூனிஸ் தனது ட்வீட்டில், "நாங்கள் தாக்குதல் பாணி வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்காமல் போனதற்கு இதுதான் காரணம். அவர்கள் அனைவரும் தற்காப்பு பாணியில் செயல்படுகிறார்கள். சச்சினின் கருத்தை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன். ரிவர்ஸ் ஸ்விங் கிட்டத்தட்ட மறைந்துவிட்டது" என கூறியுள்ளார்.

கோஹ்லியும் அதிருப்தி

கோஹ்லியும் அதிருப்தி

பல கிரிக்கெட் பிரபலங்களும் தற்போது இது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது பற்றி விராட் கோஹ்லி, "இரண்டு புதிய வேகப்பந்துகள் உபயோகிக்கும் நடைமுறை, பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் மோசமானது. நான் ஒரே ஒரு பந்து மட்டும் உபயோகிக்கும் காலத்தில் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அப்போது, ஆட்டத்தின் கடைசி பகுதியில் ரிவர்ஸ் ஸ்விங் முக்கிய பங்காகும். ஒரு பேட்ஸ்மேனாக அது மிகவும் சவாலானது" என தெரிவித்தார்.

ஐசிசி கண்டுக்குமா

ஐசிசி கண்டுக்குமா

இரண்டு பந்து உபயோகிக்கும் நடைமுறை, 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து, இந்த முறையை பற்றி எழும் கருத்துக்களை எந்த அளவுக்கு ICC எடுத்துக்கொள்ளும் என்பது தெரியவில்லை.

Story first published: Sunday, June 24, 2018, 12:37 [IST]
Other articles published on Jun 24, 2018
English summary
Sachin has tweeted that two new balls in the ODI is a perfect recipie for disaster. His opinion was backed by Waquar Younis, Virat Kohli and many more cricketers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X