For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2வது இன்னிங்க்ஸ் சிறப்பா அமையட்டும்.. தோனியை வாழ்த்திய சச்சின்.. நினைவுகூர்ந்த கிரிக்கெட் உலகம்!

மும்பை : முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

Recommended Video

Dhoniக்கு Farewell Match இல்லை ! சரியாக வழி அனுப்பியதா Indian Cricket Team?

அவர் கிரிக்கெட் உலகில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளதாக முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அவரது இரண்டாவது இன்னிங்சிற்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தோனி, ரெய்னா திடீர் ஓய்வு.. அப்ப ஐபிஎல்-இல் ஆட மாட்டாங்களா? கவலையில் ரசிகர்கள்.. பதில் இதுதான்!தோனி, ரெய்னா திடீர் ஓய்வு.. அப்ப ஐபிஎல்-இல் ஆட மாட்டாங்களா? கவலையில் ரசிகர்கள்.. பதில் இதுதான்!

சர்வதேச போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு

சர்வதேச போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அதாவது கடந்த உலக கோப்பை அரையிறுதிக்கு பிறகு அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியிருந்த நிலையில், அவர் ஓய்வு குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வந்தன. இந்நிலையில் இந்த யூகங்களுக்கு தற்போது தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இரண்டாவது இன்னிங்சிற்கு வாழ்த்து

இரண்டாவது இன்னிங்சிற்கு வாழ்த்து

74வது சுதந்திர தினம் நாடுமுழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது தோனியின் இந்த ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தோனியின் ஓய்வு குறித்து சக வீரர்கள் அதிர்ச்சி தெரிவித்தாலும், கூடவே அவரது சிறப்பான எதிர்காலம் மற்றும் இரண்டாவது இன்னிங்சிற்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவிக்க தவறவில்லை.

சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டில் தோனி மகத்தான பங்காற்றியுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தோனியுடன் இணைந்து 2011 உலக கோப்பையை வென்றது மறக்க முடியாதது என்றும் கூறியுள்ளார். தோனியின் இரண்டாவது இன்னிங்ஸ் மகத்தாக அமையவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்த்து

ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்த்து

இதேபோல ஆப்-ஸ்பின்னர் ரவிசந்திரன் அஸ்வினும் தோனிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தன்னோட ஸ்டைலிலேயே தோனிதன்னுடைய ஓய்வையும் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அஸ்வின், சாம்பியன் டிராபி, 2011 உலக கோப்பை, சென்னை ஐபிஎல் வெற்றிகளை அவர் நாட்டுக்காக பரிசளித்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா பாராட்டு

ஹர்திக் பாண்டியா பாராட்டு

ஹர்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எப்போதும் எம்எஸ் தோனி ஒருவர் மட்டுமே என்றும் தன்னுடைய நண்பர் மற்றும் மூத்த சகோதரர் அவர் என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் மிகப்பெரிய உந்து சக்தியாக தோனி இருந்ததாகவும், அவருடன் நீல ஜெர்சி போட்டு இனி ஆட முடியாத குறை மட்டுமே தனக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கெவின் பீட்டர்சன் பாராட்டு

கெவின் பீட்டர்சன் பாராட்டு

இதேபோல இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், முன்னாள் வீரர் முகமது கைஃயிப், ரஷித் கான், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கெவின் பீட்டர்சன் உள்ளிட்டவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் தோனிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் எதிரணியை கண்டு அச்சம் கொள்ளாத தோனியின் ஆட்டம் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Story first published: Saturday, August 15, 2020, 23:06 [IST]
Other articles published on Aug 15, 2020
English summary
Sachin on MS Dhoni Retirement: Sachin Tendulkar and other Cricketers Wishes Former India Captain Mahendra Singh Dhoni For His 2nd Innings. முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டில் தோனி மகத்தான பங்காற்றியுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தோனியுடன் இணைந்து 2011 உலக கோப்பையை வென்றது மறக்க முடியாதது என்றும் கூறியுள்ளார். தோனியின் இரண்டாவது இன்னிங்ஸ் மகத்தாக அமையவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X