For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அது மட்டும் என்னால முடியாது.. கடைசி வரை அடம் பிடித்த சச்சின்.. ரகசியத்தை போட்டு உடைத்த கங்குலி!

மும்பை : சச்சின் டெண்டுல்கர் - சௌரவ் கங்குலி இணைந்து இந்திய அணியின் சிறந்த துவக்க ஜோடியாக பல ஆண்டுகள் கோலோச்சினர்.

பல சாதனைகளை செய்துள்ள சச்சின் - கங்குலி ஜோடியில் யார் போட்டியின் முதல் பந்தை சந்திப்பார் தெரியுமா?

எப்போதும் கங்குலி தான் போட்டியின் முதல் பந்தை சந்திப்பார். ஒரீரு போட்டிகளில் மட்டுமே சச்சின் டெண்டுல்கர் முதல் பந்தை சந்தித்துள்ளார். அந்த ரகசியம் பற்றி கங்குலி ஒரு பேட்டியில் விரிவாக கூறி உள்ளார்.

ஓபனிங்ல இவரை ஆட வைப்பேன்.. இதை மட்டும் சேவாக் கேட்டா அவ்வளவு தான்.. கங்குலி தந்த சர்ப்ரைஸ்!ஓபனிங்ல இவரை ஆட வைப்பேன்.. இதை மட்டும் சேவாக் கேட்டா அவ்வளவு தான்.. கங்குலி தந்த சர்ப்ரைஸ்!

சச்சின் - கங்குலி ஜோடி

சச்சின் - கங்குலி ஜோடி

90களின் மத்தியில் இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் - சௌரவ் கங்குலி ஆடி வந்தனர். இருவரும் 176 போட்டிகளில் சேர்ந்து துவக்கம் அளித்துள்ளனர். உலகிலேயே சிறந்த துவக்க ஜோடியாகவும் இன்று வரை கருதப்படுகிறது.

சாதனை ஜோடி

சாதனை ஜோடி

இந்த ஜோடி 176 போட்டிகளில் 8,227 ரன்கள் குவித்துள்ளனர். இந்த ஜோடியின் சராசரி 47.55 ஆகும். இவர்கள் இருவரும் சேர்ந்து 26 நூறு ரன் பார்ட்னர்ஷிப்களும், 29 50+ பார்ட்னர்ஷிப்களும் வைத்துள்ளனர். 2001இல் கென்யா அணிக்கு எதிராக 258 ரன்கள் குவித்து சாதனை செய்து இருந்தனர்.

சச்சினின் பழக்கம்

சச்சினின் பழக்கம்

மிகச் சிறந்த துவக்க வீரர்களுள் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் எப்போதும் போட்டியின் முதல் பந்தை சந்திக்காமல் தவிர்ப்பார் என்ற தகவல் கூறப்பட்டு வருகிறது. அது பற்றி அவருடன் நீண்ட காலம் துவக்க வீரராக ஆடிய கங்குலியிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

கங்குலி என்ன சொன்னார்?

கங்குலி என்ன சொன்னார்?

அது பற்றி பேசிய கங்குலி, சச்சின் டெண்டுல்கர் எப்போதும் பந்துவீச்சாளர் முனையில் நிற்கவே விரும்புவார் என்றும் என்னை முதல் பந்தை சந்திக்க வைப்பார் எனக் கூறி அது உண்மை தான் என உறுதி செய்தார். மேலும், அதற்கு சச்சின் தன் பேட்டிங் பார்மை வைத்து இரண்டு காரணத்தை மாற்றி, மாற்றி கூறுவார் என்றார்.

இரண்டு காரணம்

இரண்டு காரணம்

சச்சின் சிறப்பான பார்மில் இருந்தால் அதை மாற்ற வேண்டாம், நீங்களே முதல் பந்தை சந்தியுங்கள் என கூறுவாராம். சில் சமயம் மோசமான பேட்டிங் பார்மில் இருக்கும் போது, தன் பார்ம் மோசமாக இருப்பதால் முதல் பந்தை சந்திக்கும் உறுதி இப்போது இல்லை என்றும் கூறுவாராம்.

தாண்டிப் போன கங்குலி

தாண்டிப் போன கங்குலி

கங்குலி, அவரிடம் சில சமயம் நீங்களும் முதல் பந்தை சந்திக்க வேண்டும் என்று கூறுவாராம். ஆனால், சச்சின் அதை கேட்க மாட்டார். அப்போது, களத்திற்கு செல்லும் போது வேகமாக நடந்து சென்று பந்துவீச்சாளர் முனையில் நின்று கொள்வாராம் கங்குலி.

வேறு வழியின்றி

வேறு வழியின்றி

அப்போது டிவி கேமராக்கள் இருக்கும் என்பதால் சச்சின் வேறு வழியின்றி கங்குலியிடம் இடத்தை மாற்றி நிற்குமாறு கூறாமல், தானே முதல் பந்தை சந்திப்பாராம். இது போல சில முறை தான் செய்துள்ளதாக கங்குலி கூறினார்.

சேவாக் அனுபவம்

சேவாக் அனுபவம்

சச்சினுடன் நீண்ட காலம் துவக்க வீரராக செயல்பட்ட மற்றொரு வீரர் வீரேந்தர் சேவாக்கும், சச்சின் எப்படி தன்னை முதல் பந்தை சந்திக்க வைப்பார் என பல பேட்டிகளில் கூறி உள்ளார். தற்போது கங்குலியும் அதை உறுதி செய்துள்ளார்.

Story first published: Monday, July 6, 2020, 23:50 [IST]
Other articles published on Jul 6, 2020
English summary
Sachin Tendulkar never took striker’s end reveals Sourav Ganguly
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X