For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மனைவியை பத்திரிகையாளராக நடிக்க வைத்த சச்சின்.. ஜாம்பவானின் சுவாரஸ்ய காதல் கதை..முதல் சந்திப்பு எங்கு

மும்பை: சச்சின் டெண்டுல்கர் தனது மனைவியை முதன் முதலில் தன் பெற்றோரிடம் அழைத்துச்சென்ற போது பத்திரிகை நிரூபராக நடிக்க வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 26வது திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இவர் காதலில் எப்படி வெற்றி பெற்றார் என்ற கதையை நினைவூட்ட வேண்டியுள்ளது.

சச்சினின் காதல்

சச்சினின் காதல்

கிரிக்கெட் வரலாற்றில் பல பவுலர்களுக்கும் தனது மாஸ்டர்ஸ் க்ளாஸ் ஷாட்ஸால் தலைவலி ஏற்படுத்திய சச்சின் டெண்டுல்கர் மிகவும் சாதுவான குணம் கொண்டவர். சச்சின் டெண்டுல்கர் தன்னை விட வயதில் மூத்த பெண்னை திருமணம் செய்து கொண்டார் என்ற உதாரணம் இன்றைக்கும் இளைஞர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் அவரின் சுவாரஸ்ய கதை பலருக்கும் தெரியாது.

முதல் சந்திப்பு எப்போது

முதல் சந்திப்பு எப்போது

சச்சின் மற்றும் அவர் அஞ்சலி முதன்முதலில் மும்பை விமான நிலையத்தில் தான் சந்தித்துக்கொண்டுள்ளனர். அப்போது சச்சினுக்கு வயது 17. அஞ்சலி தனது தாயை அழைத்து செல்வதற்காகவும், சச்சின் தனது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டும் மும்பை விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போதுதான் அவர்கள் இருவருக்குள்ளும் சந்திப்பு ஏற்பட்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மலர்ந்த காதல்

மலர்ந்த காதல்

அதன் பின்னர் இடைபட்ட நண்பர் ஒருவரின் உதவியால் இருவரும் ஒருவர் பற்றி ஒருவர் தெரிந்துக்கொண்டனர். பின்னர் கடிதங்கள், தொலைப்பேசி அழைப்புகள், சந்திப்பு என பேச தொடங்கினர். சில காலம் இப்படியே போய்க்கொண்டிருந்த நிலையில் ஒருக்கட்டத்தில் அவர்களிடையே காதல் மலர்ந்தது.

சச்சின் திட்டம்

சச்சின் திட்டம்

சச்சின் டெண்டுல்கர், காதலியை தன் பெற்றோரிடன் முதன்முதலில் அழைத்து செல்லும்போது சற்று பதற்றமடைந்துள்ளார். இதனால் அஞ்சலியை பத்திரிகையாளரை போல வேடமணிய வேண்டும் எனச்சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அஞ்சலியும் அதற்கேற்றார் போல சென்று சச்சினின் பெற்றோரை சந்தித்துள்ளார். இதனை சச்சினின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் வெளியீட்டின் போது அஞ்சலி நினைவுக்கூர்ந்தார்.

கடிதத்தில் காதல்

கடிதத்தில் காதல்

இதே போல அதிகப்படியாக கடிதம் மூலம் மட்டுமே அவர்கள் இருவரும் காதல் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து பேசிய அஞ்சலி, நான் அவரை சந்தித்தது 1990களில் தான். அப்போது மொபைல், சமூக வலைதளம் எதுவும் கிடையாது. அவரிடன் தொலைப்பேசியில் வேண்டும் என்றால் 48 ஏக்கரில் விரிந்திருக்கும் எனது கல்லூரி வளாகத்தை தாண்டி வெளியே வரவேண்டும். அழைப்பேசியின் செலவுகளும் அதிகம். இதனால் கடிதம் மூலம் மட்டுமே பேசிக்கொள்வோம்.

Story first published: Tuesday, May 25, 2021, 20:10 [IST]
Other articles published on May 25, 2021
English summary
Sachin Tendulkar Pretended Anjali as Journalist For First Meeting With Family
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X