For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு கவர் டிரைவ் கூட அடிக்காமல் டபுள் செஞ்சுரி போட்டாரே சச்சின்... அதுதான் பெஸ்ட்.. லாரா புகழாரம்

டெல்லி: 10 ஆண்டுகளுக்கு முன்பு, சிட்னி மைதானத்தில் ஒரு கவர் கூட அடிக்காமல், தனது 200 ரன்களை பூர்த்தி செய்தாரே சச்சின், அதுதான் பெஸ்ட் என்று புகழாரம் சூட்டியுள்ளார் பிரையன் லாரா.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ள டிரினிடாட் டொபாகோ அணியின் மென்டார் ஆக இருக்கிறார் லாரா.

இதற்காக இந்தியா வந்துள்ள லாரா நேற்று டெல்லி மைதானத்தில் சச்சினை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் லாரா பேசுகையில், சச்சினை புகழ்ந்து தள்ளினார்.

ஆஸி. யை அதிர வைத்த சச்சின்

ஆஸி. யை அதிர வைத்த சச்சின்

10 வருடங்களுக்கு முன்பு சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது சச்சின் ஆடிய ஆட்டம் இன்னும் எனக்கு நினைவில் உள்ளது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார் அப்போட்டியில் சச்சின்.

ஒரு கவர் டிரைவ் கூட அடிக்கவில்லை

ஒரு கவர் டிரைவ் கூட அடிக்கவில்லை

தனது 200 ரன்களைத் தொடும் வரை சச்சின் ஒரு கவர் கூட அடிக்கவில்லை என்பது முக்கியமானது.

மாத்தி யோசிக்கிறவர் சச்சின்

மாத்தி யோசிக்கிறவர் சச்சின்

மற்றவர்களை விட எப்போதுமே வித்தியாசமானவர் சச்சின். இந்திய அணியில் டிராவிட் இருந்திருக்கிறார், லட்சுமண் இருந்திருக்கிறார். ஆனால் சச்சின் தனி... ஸ்பெஷல் வீரர்.

சஞ்சு சாம்சன் அசத்துகிறார்

சஞ்சு சாம்சன் அசத்துகிறார்

இந்தியாவில் தற்போது நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக ஆடுகின்றனர். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன். அவரது ஆட்டம் என்னைக் கவர்ந்துள்ளது.

டுவென்டி 20 க்கு நான் சரிப்பட மாட்டேன்

டுவென்டி 20 க்கு நான் சரிப்பட மாட்டேன்

டுவென்டி 20 போட்டிகளுக்கு நான் பொருத்தமானவன் என்று நினைக்கவில்லை. ஆனால் சச்சின், பான்டிங் போன்றோர் இதற்கு ஏற்றார் போல விளையாடியுள்ளனர் என்றார் லாரா.

சச்சின் போட்ட 241

சச்சின் போட்ட 241

லாரா குறிப்பிட்ட அந்த டெஸ்ட் போட்டி கடைசியில் டிராவில் முடிந்தது. அப்போட்டியில் சச்சின் 241 ரன்களை விளாசினார்.

ஸ்டீவ் வாவின் கடைசிப் போட்டி

ஸ்டீவ் வாவின் கடைசிப் போட்டி

அதுதான் ஸ்டீவ் வாவின் கடைசி டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 3, 2013, 13:07 [IST]
Other articles published on Oct 3, 2013
English summary
The many heads totting the stands at the fortress-like Feroz Shah Kotla here on Wednesday got more than their money's worth as Brian Lara recalled Sachin Tendulkar's masterpiece at the Sydney Cricket Ground even as the Indian walked back to the time the Trinidadian would have the best of bowlers at his mercy. It was a sight any cricket fan would die for as the two masters of modern-day cricket stood together for a few moments, literally leaving the the crowd at the Kotla in a state of ecstasy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X