ஓய்வு பெற்று 7 வருடம் ஆனது.. இன்றும் சச்சினுக்கு உலகளவில் பெரும் சொத்துமதிப்பு..கோலியே பின்னாடி தான்

மும்பை: கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று 8 வருடங்கள் ஆன போதும், இன்றைய கேப்டன் கோலியை விட அதிக வருமானம் ஈட்டும் நபராக விளங்குகிறார்.

இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே யாராலும் அழிக்க முடியாத தடத்தை பதித்தவர் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என செல்லமாக அழைக்கப்படும் சச்சின், வருமானம் ஈட்டுவதிலும் மிகப்பெரும் பிரபலம் தான்.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து உலகின் தலை சிறந்த வீரராக விளங்கிய சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்று 8 வருடங்கள் ஆன போதும், இன்றும் உலகின் அதிகம் சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டாப்பில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.1,090 கோடி ஆகும்.

எப்படி வருமானம்

எப்படி வருமானம்

சச்சின் ஓய்வு பெற்றதால் கிரிக்கெட் மூலம் அவருக்கு வருமானம் வராமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு விளம்பரங்கள், தனியார் நிறுவன ஒப்பந்தங்கள், ஸ்பான்சர்ஷிப் ஆகியவை மூலம் வருமானம் வந்துகொண்டே தான் உள்ளது. லிவ்ப்யூர், லூமினஸ் பேட்டரிஸ் ஆகிய நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளாக சச்சினுடனான ஒப்பந்தத்தை புதுபித்துக்கொண்டே வருகின்றன.

பிராண்ட்

பிராண்ட்

விளம்பரங்களில் நடிப்பதற்கு பிராண்ட் வேல்யூ என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும். அதை வைத்துதான் சம்பளம் நிர்ணயிக்கப்படும். அந்தவகையில் சச்சினின் பிராண்ட் வேல்யூ அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. கடந்த 2019ம் ஆண்டின் கணக்கின் படி சச்சினின் பிராண்ட் வேல்யூ 2.5 கோடியாக உள்ளது.

 கோலியே குறைவுதான்

கோலியே குறைவுதான்

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலியே, சச்சின் டெண்டுல்கரை விட குறைவான வருமானம் தான் ஈட்டுகிறார். அவர் விராங், பூமா, பூஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து வருகிறார். கோலியின் சொத்து மதிப்பு ரூ.638 கோடியாக உள்ளது. இதே போல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொத்து மதிப்பு ரூ. 767 கோடியாக உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sachin Tendulkar's net worth is more than Team India's skipper Virat Kohli, even after his Retirement
Story first published: Wednesday, June 9, 2021, 15:53 [IST]
Other articles published on Jun 9, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X