For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவருதான் இல்லையே.. இவர சேர்த்துக்குங்க... சச்சின் ஓபன் சப்போர்ட் செய்யும் அந்த வீரர்

Recommended Video

காயம்பட்ட புவனேஸ்வர் குமார் இடத்திற்கு காத்திருக்கும் முகமது சமி- வீடியோ

லண்டன்: உலக கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்தி வரும் இந்திய அணி, அடுத்ததாக சனிக் கிழமை ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. பாக். அணியுடனான கடந்த போட்டியில் காயமடைந்த புவனேஸ்வர் குமார் விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக இந்திய அணியில் யாருக்கு இடம் கிடைக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. பலரும் முகமது ஷமியை அணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறி வருகின்றனர்.

டெண்டுல்கர் சொல்வது என்ன?

டெண்டுல்கர் சொல்வது என்ன?

இந்நிலையில், இதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். அவர் கூறியிருப்பதாவது: முகமது ஷமியின் பந்துவீச்சு முறை மிகவும் தனித்துவமாக இருக்கிறது.

ஷமிக்கு வாய்ப்பு தரலாம்

ஷமிக்கு வாய்ப்பு தரலாம்

புவனேஸ்வர் குமார் இல்லாததால் அடுத்த போட்டியில் அவருக்கு பதிலாக முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர் நிச்சயம் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் என்றார்.

இந்தியாவுக்கு பெருமை

இந்தியாவுக்கு பெருமை

மான்செஸ்டரில் நடைபெற்றலீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 89 ரன்களில் இந்திய அணி தோற்கடித்து 7வது முறையாக உலகக் கோப்பையில் வென்ற அணி எனும் பெருமையை தக்கவைத்தது.

முதல் கட்ட உதவி

முதல் கட்ட உதவி

இந்த போட்டியில் புவனேஸ்வர் குமார் தனது 3வது ஓவரை வீசியபோது திடீரென தசைப் பிடிப்பு ஏற்பட்டது. முதல்கட்டமாக முதலுதவி கொடுத்தாலும் தொடர்ந்து பந்துவீச இயலாததால் ஓய்வுக்கு சென்றார். அவரின் ஓவரில் மீதமிருந்த 2 பந்துகளை விஜய் சங்கர் வீசினார். அதன்பின் போட்டி முழுவதும் புவனேஸ்வர் குமார் பந்துவீச வரவில்லை.

Story first published: Wednesday, June 19, 2019, 20:12 [IST]
Other articles published on Jun 19, 2019
English summary
Sachin tendulkar supports mohammed shami.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X