For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலிய காட்டுத்தீ : நிவாரண கிரிக்கெட் போட்டிக்கு கோச்சாக மாறிய சச்சின்

Recommended Video

ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரணத்திற்காக பயிற்சியாளராகும் சச்சின்

மும்பை : ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரணத்திற்காக நடத்தப்படவுள்ள கிரிக்கெட் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஸ் ஆகியோர் பயிற்சியாளர்களாக செயல்பட உள்ளனர்.

ரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோர் இந்த நட்சத்திர அணிகளின் கேப்டன்களாக செயல்பட உள்ளநிலையில், போட்டி வரும் பிப்ரவரி 8ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிகளில் ஓய்வு பெற்ற வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, மைக்கேல் கிளார்க், ஷேன் வாட்சன் போன்றவர்களும் இந்த போட்டியில் கலந்துகொண்டு விளையாட உள்ளனர். இதன்மூலம் திரட்டப்படும் நிதி ஆஸ்திரேலிய செஞ்சிலுவை பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பப்படவுள்ளது.

29 பேர் உயிரிழப்பு

29 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2000 பேர் தங்களது வீடுகளை இழந்து வாடி வருகின்றனர்.

செரீனா, வார்னே நன்கொடை

செரீனா, வார்னே நன்கொடை

காட்டுத்தீயில் சிக்கி மனிதர்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான விலங்குகளும் உயிரிழந்துள்ளன. இந்த காட்டுத்தீக்கு உலக அளவில் வார்னே, செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்ட பல வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகின்றனர்.

மெல்போர்னில் நடைபெற்ற போட்டி

மெல்போர்னில் நடைபெற்ற போட்டி

இந்த காட்டுத்தீக்கு நன்கொடை வழங்கும் வகையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு முன்பாக மெல்போர்னில் டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டு, நன்கொடை வசூலிக்கப்பட்டு செஞ்சிலுவை பேரிடர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டெண்டுல்கர், வால்ஸ் கோச்

டெண்டுல்கர், வால்ஸ் கோச்

இந்நிலையில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும்வகையில் வரும் 8ம்தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிக்கு இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கோர்ட்னே வால்ஸ் போன்றவர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.

இரு அணிகள் மோதல்

இரு அணிகள் மோதல்

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்கள் ஷேன் வார்னே மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகள் மோதவுள்ளன.

செஞ்சிலுவை பேரிடர் நிவாரண நிதி

செஞ்சிலுவை பேரிடர் நிவாரண நிதி

இந்தப் போட்டியில் ஓய்வு பெற்ற வீரர்கள் ஆடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஜஸ்டின் லேங்கர், மைக்கேல் கிளார்க், ஷேன் வாட்சன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று ஆடவுள்ளனர். இதன்மூலம் பெறப்படும் நிதி, செஞ்சிலுவை பேரிடர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட உள்ளது.

Story first published: Tuesday, January 21, 2020, 13:51 [IST]
Other articles published on Jan 21, 2020
English summary
Sachin Tendulkar & Courtney Walsh to coach Australia bushfire relief match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X