For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குருநாதரின் முதலாண்டு நினைவு தினம் - உருக்கமாக அஞ்சலி செலுத்திய சச்சின்

Recommended Video

சச்சினின் குரு ராமகன்ட் அச்ரேகர் 87 வயதில் மறைவு- வீடியோ

மும்பை : தன்னுடைய பயிற்சியாளர் ராமகந்த் ஆச்ரேகரின் முதலாண்டு நினைவு தினத்தையொட்டி முன்னாள் பேட்ஸ்மேன்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகியோர் டிவிட்டர் பக்கத்தின்மூலம் தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி உள்ளிட்டோருக்கு பயிற்சி அளித்துள்ள ராமகந்த் ஆச்ரேகர், கடந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

ராமகந்த் ஆச்ரேகரின் முதலாண்டு நினைவு தினத்தையொட்டி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் அஞ்சலி செலுத்தியுள்ளார். தங்களது உள்ளங்களில் அவர் நீடித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பயிற்சியளித்த ஆச்ரேகர்

பயிற்சியளித்த ஆச்ரேகர்

கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு ஆரம்ப காலங்களில் கிரிக்கெட்டில் பயிற்சி அளித்தவர் ராமகந்த் ஆச்ரேகர். தன்னுடைய ஸ்கூட்டரின் பின்னால் வைத்துக்கொண்டு அவர் மைதானங்களுக்கு சச்சினை அழைத்து சென்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

காம்ப்ளி, ஆம்ரேவுக்கும் பயிற்சி

காம்ப்ளி, ஆம்ரேவுக்கும் பயிற்சி

துரோணாச்சார்யா விருது பெற்றுள்ள ராமகந்த், சச்சின் டெண்டுல்கர் மட்டுமின்றி வினோத் காம்ப்ளி, பிரவீன் ஆம்ரே உள்ளிட்ட வீரர்களுக்கும் மும்பை தாதரில் உள்ள சிவாஜி பார்க்கில் வைத்து கிரிக்கெட் பயிற்சி அளித்துள்ளார்.

கடந்த ஜனவரி 2ம் தேதி உயிரிழப்பு

கடந்த ஜனவரி 2ம் தேதி உயிரிழப்பு

கடந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி வயது மூப்பு காரணமாக ராமகந்த் உயிரிழந்தார். அவரது பிரிவையொட்டி சச்சின் டெண்டுல்கர் இரங்கல் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

செழிப்பானதாக இரங்கல்

செழிப்பானதாக இரங்கல்

இந்த இரங்கல் அறிவிப்பில் சொர்க்கத்தில் உள்ள கிரிக்கெட், ராமகந்த் ஆச்ரேகரின் வரவால் செழிப்பானதாக சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டிருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் அஞ்சலி

இந்நிலையில் ராமகந்த் ஆச்ரேகரின் முதலாண்டு நினைவு தினத்தையொட்டி சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்க்ததில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதில் ஆச்ரேகர் எப்போதும் தன்னுடைய நெஞ்சில் நீங்காமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

"வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுத்தவர்"

இதனிடையே முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியும் ஆச்ரேகரின் முதலாண்டு நினைவு தினத்தையொட்டி டிவிட்டர் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் தனது பதிவில் கிரிக்கெட்டை மட்டுமின்றி வாழ்க்கை பாடத்தையும் தனக்கு கற்று தந்தவா் ஆச்ரேகர் என குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, January 2, 2020, 18:26 [IST]
Other articles published on Jan 2, 2020
English summary
Sachin & Kambli Tribute for Ramakand Achrekar on his Death Anniversary
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X