For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி கிரிக்கெட்டே வேணாம்.. 2007இல் நொந்து போன சச்சின்.. காரணம் யார்? ரகசியத்தை உடைத்த கேரி கிர்ஸ்டன்

மும்பை : 2007ஆம் ஆண்டு கிரிக்கெட்டை விட்டே செல்லும் மன நிலையில் இருந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

Recommended Video

Sachin Tendulkar wanted to leave cricket, reveals Gary Kirsten.

எனினும், அதன் பின் சச்சின் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி அடுத்த ஆறு ஆண்டுகளில் 24 சதங்கள் குவித்தார்.

2007இல் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டை விட்டே செல்லும் அளவுக்கு மனம் வெறுக்க யார் காரணம்?

ரசிகரின் கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த ரோகித் சர்மாரசிகரின் கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த ரோகித் சர்மா

2007இல் இந்தியா

2007இல் இந்தியா

2007இல் இந்திய கிரிக்கெட் இரண்டு துருவங்களை சந்தித்தது. 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா குரூப் சுற்றுடன் வெளியேறியது. மூத்த வீரர்கள் அதிகம் இன்றி களமிறங்கிய இளம் டி20 அணி 2007 டி20 உலகக்கோப்பை வென்றது.

கடும் குழப்பம்

கடும் குழப்பம்

50 ஓவர் உலகக்கோப்பை வரை இந்திய அணியில் கடும் குழப்பம் நிலவியது. அதற்கு மூல காரணம் அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல். அப்போது இந்திய அணியில் பிளவுகள் இருந்ததாக கூறப்பட்டது. மேலும், ஒவ்வொரு வீரரையும் கிரேக் சேப்பல் தன் இஷ்டப்படி மாற்றி ஆட வைத்ததாக குற்றச்சாட்டு உண்டு.

மிடில் ஆர்டரில் சச்சின்

மிடில் ஆர்டரில் சச்சின்

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக சிறப்பாக ஆடியவர். அந்த இடத்தில் பேட்டிங் செய்து பல சாதனைகளை செய்தவர். ஆனால், அவர் கிரேக் சேப்பல் வரவுக்கு பின் ஒரு கட்டத்தில் மிடில் ஆர்டரில் ஆட வைக்கப்பட்டார்.

அதை விரும்பவில்லை

அதை விரும்பவில்லை

சச்சின் டெண்டுல்கர் அதை விரும்பவில்லை. எனினும், அணிக்காக மிடில் ஆர்டரில் ஆடி வந்தார். அது பெரிய அளவில் பலன் தரவில்லை. கிட்டத்தட்ட இந்திய அணியில் பெரும்பாலான வீரர்களின் நிலை அப்போது அதுதான். கங்குலி கேப்டனாக இருந்த போது இருத்த சுதந்திரம் அப்போது இல்லை.

காரணம் யார்?

காரணம் யார்?

இந்த நிலையில், 2007 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது. அதன் பின் சச்சின் கிரிக்கெட்டை விட்டே வெளியேறி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். அதற்கு முக்கிய காரணம், கிரேக் சேப்பல் அவரை துவக்க வீரராக ஆட விடாமல் செய்தது தான்.

24 சதங்கள்

24 சதங்கள்

பின் கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக வந்த பின் சச்சின் டெண்டுல்கர் மீண்டும் துவக்க வீரராக மாறினார். பின் அவர் 24 சதங்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்வுகள் பற்றி கேரி கிர்ஸ்டன் இப்போது மனம் திறந்துள்ளார். கிரேக் சேப்பலை பற்றி குறிப்பிடாமல் பேசி உள்ளார் கேரி கிர்ஸ்டன்.

அனுபவித்து ஆடவில்லை

அனுபவித்து ஆடவில்லை

நான் இந்தியா வந்த போது சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டை விட்டு செல்லும் மனநிலையில் இருந்தார். அவரைப் பொறுத்தவரை அவர் தன் பேட்டிங் வரிசையில் ஆடவில்லை. அவர் கிரிக்கெட்டை அப்போது அனுபவித்து ஆடவில்லை என்றார் கேரி கிர்ஸ்டன்.

அடுத்த மூன்று ஆண்டுகளில்..

அடுத்த மூன்று ஆண்டுகளில்..

மேலும், தன் இடத்தில் பேட்டிங் செய்யத் துவங்கி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவர் 18 சர்வதேச சதங்களை அடித்தார். 2011 உலகக்கோப்பையையும் வென்றார் என்று கூறினார் இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன்.

Story first published: Wednesday, June 17, 2020, 21:13 [IST]
Other articles published on Jun 17, 2020
English summary
Sachin Tendulkar wanted to leave cricket in 2007 reveals former World cup winning India coach Gary Kirsten.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X