கிரிக்கெட்டை விட்டே போறேன்.. சோர்ந்து போன யுவராஜ்.. சச்சின் சொன்ன அந்த வார்த்தை.. செம கம்பேக்!

மும்பை : யுவராஜ் சிங் ஒருமுறை தான் கிரிக்கெட்டை விட்டே விலகும் முடிவில் இருந்ததாகவும், அப்போது சச்சின் தனக்கு சொன்ன வார்த்தைகளால் மீண்டு வந்ததாகவும் கூறி உள்ளார்.

Sponsors கிடைக்கவில்லை.. தவிக்கும் IPL அணிகள்

மீண்டு வந்ததோடு மட்டுமில்லாமல், அப்போது யுவராஜ் சிங் ஒருநாள் போட்டிகளில் தன் அதிகபட்ச ஸ்கோரையும் எடுத்தார்.

யுவராஜ் சிங் 2000மாவது ஆண்டில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தார்.

யுவராஜ் சிங் விலகல்

யுவராஜ் சிங் விலகல்

2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வெற்றிகளில் அவரின் பங்கு அதிகம். அதன் பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிரிக்கெட்டில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். பின் தீவிர பயிற்சி செய்து மீண்டும் இந்திய அணியில் நுழைந்தார்.

சோர்ந்து போன யுவராஜ்

சோர்ந்து போன யுவராஜ்

ஆனால், அதன் பின் அவரால் தொடர்ந்து ஒரே பார்மில் நீடிக்க முடியவில்லை. அதனால், இந்திய அணியில் வாய்ப்பை இழந்தார். அப்போது மிகவும் சோர்ந்து போய் இருக்கிறார் அவர். இந்திய அணியில் இடம் இல்லை என்றால் ஏன் கிரிக்கெட் ஆட வேண்டும் என நினைத்துள்ளார்.

உத்வேகம் அளித்த சச்சின்

உத்வேகம் அளித்த சச்சின்

அப்போது சச்சினிடம் பேசி உள்ளார் யுவராஜ் சிங். அப்போது சச்சின் கூறிய வார்த்தைகளால் உத்வேகம் பெற்று உள்ளூர் போட்டிகளில் ஆடி உள்ளார். தொடர்ந்து இந்திய அணியிலும் வாய்ப்பு பெற்று தன் அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோரை அடித்தார்.

ஏன் கிரிக்கெட் ஆடுகிறோம்?

ஏன் கிரிக்கெட் ஆடுகிறோம்?

அது பற்றி கூறுகையில், சில ஏற்ற இறக்கங்கள் இருந்தன. நான் அது குறித்து சச்சினிடம் தொடர்ந்து பேசி வந்தேன். அவர், "நாம் ஏன் கிரிக்கெட் ஆடுகிறோம்? நாம் சர்வதேச கிரிக்கெட் ஆட விரும்புகிறோம் என்பது உண்மை தான். ஆனால், நாம் இந்த விளையாட்டின் மீதான காதலுக்காக ஆடுகிறோம். இந்த விளையாட்டை நீ விரும்பினால், அதை ஆடு" எனக் கூறி உள்ளார்.

நீயே முடிவு செய்

நீயே முடிவு செய்

மேலும் சச்சின், "நான் உன் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்வேன் எனத் தெரியாது. ஆனால், நீ இந்த விளையாட்டை விரும்பினால் அதை ஆடு. எப்போது ஓய்வு பெறலாம் என்பதை நீயே முடிவு செய். மற்றவர்கள் அதை முடிவு செய்யக் கூடாது" என யுவராஜிடம் கூறி உள்ளார். மேலும் சச்சின், "நான் உன் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்வேன் எனத் தெரியாது. ஆனால், நீ இந்த விளையாட்டை விரும்பினால் அதை ஆடு. எப்போது ஓய்வு பெறலாம் என்பதை நீயே முடிவு செய். மற்றவர்கள் அதை முடிவு செய்யக் கூடாது" என யுவராஜிடம் கூறி உள்ளார்.

யுவராஜ் சிங் வாய்ப்பு பெற்றார்

யுவராஜ் சிங் வாய்ப்பு பெற்றார்

அதன் பின், சர்வதேச போட்டிகளில் ஆட இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லையே என சோர்ந்து இருந்த யுவராஜ் சிங் உள்ளூர் போட்டிகளில் ஆடத் துவங்கினார். அங்கிருந்து இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார்.

ஆடுவதை நிறுத்தவில்லை

ஆடுவதை நிறுத்தவில்லை

மீண்டும் அணியில் இருந்து நீக்கப்படுவதும், சேர்க்கப்படுவது என அவரது கிரிக்கெட் வாழ்வு இருந்தது. அனாலும், தான் கிரிக்கெட் ஆடுவதை நிறுத்தவில்லை என்ற யுவராஜ் சிங், 2017இல் தன் அதிகபட்ச ஸ்கோரை எடுத்தார்.

150 ரன்கள்

150 ரன்கள்

2017இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக கட்டாக் நகரில் நடந்த ஒருநாள் போட்டியில் 127 பந்துகளில் 150 ரன்கள் குவித்தார் யுவராஜ் சிங். அதன் மூலம், அடுத்து நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சாம்பியன்ஸ் ட்ராபிக்கு பின் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஓய்வு

ஓய்வு

சச்சின் சொன்ன வார்த்தைகளால் மட்டுமே யுவராஜ் சிங் 2017இல் தன் உச்சகட்ட ஆட்டத்தை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்த முடிந்தது. 2019இல் கூட மற்றவர்களை தன் ஓய்வை முடிவு செய்ய விடாமல் தானே தான் அறிவித்தார் யுவராஜ்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sachin Tendulkar words changed Yuvraj Singh’s career
Story first published: Sunday, July 26, 2020, 18:27 [IST]
Other articles published on Jul 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X