For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சாதனைகள்... முறியடிக்கும் இந்திய வீரர்கள்... ஒரு குட்டி அலசல்

Recommended Video

Sachin tendulkar records | சச்சின் சாதனைகள்: முறியடிக்கும் இந்திய வீரர்கள்! ஒரு அலசல்

மும்பை:மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினின் சாதனைகள் யாரால் முறியடிக்கப்பட்டு கொண்டு இருக்கிறதோ இல்லையோ... நம் நாட்டு வீரர்களால் ஒவ்வொன்றாக முறியடிக்கப்பட்டே வருகின்றன. அதில் எந்த சாதனைகள் யாரால் வீழ்த்தப்பட்டது என்பதை இங்கு காணலாம்.

சாதனைகள் என்பதே முறியடிக்கப்பட அல்லது வீழ்த்தப்படுவதற்காக தான் படைக்கப் படுகின்றன. எப்படி படைக்கும் போது அது சாதனை என்று பார்க்கப்படுகிறதோ அதே போன்று வீழ்த்தப்படும் போதும் அது சாதனை. அதில் கிரிக்கெட், நமது நாட்டில் மதமாக பாவிக்கப்படுகிற போது அதில் படைக்கப்படும் சாதனைகளும் கொஞ்சமல்ல.

ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் பல. சர்வதேச ஒருநாள் போட்டிகளில், அவரின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் (49) அடித்தவர், அதிக அரை சதங்கள் (96) கடந்தவர், அதிக ரன்கள் (18,426) குவித்தவர் என்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் நமது மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின்.

குவாலிபயர் போட்டியில் டெல்லியை வீழ்த்த தல தோனி சூப்பர் பிளான்..! பேட்டிங், பவுலிங்கில் மாற்றங்கள் குவாலிபயர் போட்டியில் டெல்லியை வீழ்த்த தல தோனி சூப்பர் பிளான்..! பேட்டிங், பவுலிங்கில் மாற்றங்கள்

பேசப்படும் சாதனைகள்

பேசப்படும் சாதனைகள்

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும்... அவரது சாதனைகள் இன்றும் பேசப் படுகின்றன.... முறியடிக்கப் படுகின்றன. ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகளை முறியடித்த இந்திய வீரர்கள் யார் என்பதை நாம் பார்க்கலாம்.

ஹிட் மேன் ரோகித்

ஹிட் மேன் ரோகித்

463 ஒருநாள் போட்டிகளில் ஒருநாள் போட்டிகளில் 5 முறை 150 ரன்களுக்கு மேல் குவித்தவர் என்ற சாதனையை சச்சின் படைத்திருந்தார். ஆனால்... அந்த சாதனையை முறியடித்தவர் நமது ஹிட் மேன் ரோகித் சர்மா. சச்சின் டெண்டுல்கர் 2012 ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து தான் அந்த சாதனையை ரோகித் முறியடித்தார்.

அதிக முறை 150 ரன்கள்

அதிக முறை 150 ரன்கள்

2018ல் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டது. அந்த போட்டியில் ரோகித் ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் எடுத்த பொழுது, அது அவருக்கு ஆறாவது 150+ ஸ்கோராக அமைந்தது. எனவே, அதிக முறை 150 ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன் என்னும் என்ற சச்சின் சாதனையை முறியடித்தார், ரோகித் சர்மா.

சச்சினுக்கு 2வது இடம்

சச்சினுக்கு 2வது இடம்

ரோகித் சர்மா, அதிக முறை 150 ரன்களுக்கு மேல் கடந்தவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, சச்சின் டெண்டுல்கர் அதிக முறை 150 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் உடன் இணைந்து 2வது இடத்தில் உள்ளார்.

சாதனை படைத்த கோலி

சாதனை படைத்த கோலி

2001ம் ஆண்டு மார்ச்சில் சச்சின், ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த சாதனையை படைக்க அவருக்கு 259 போட்டிகள் தேவைப்பட்டன. ஆனால்... அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக, 17 வருடங்கள் கழித்து, 2018 அக்டோபர் 24ம் நாள், வேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்னும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை, விராட் கோலி முறியடித்தார்.

54 போட்டிகள் குறைவு

54 போட்டிகள் குறைவு

அதற்கு கோலிக்கு வெறும் 205 போட்டிகள் மட்டுமே தேவைப்பட்டன. அதாவது, பத்தாயிரம் ரன்களை கடக்க சச்சின் எடுத்துக்கொண்ட போட்டிகளை விட 54 போட்டிகள் குறைவு என்பது மிக முக்கியம். ஆகவே, ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

முறியடித்த கோலி

முறியடித்த கோலி

சச்சின் டெண்டுல்கரிடம் சேசிங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனை இருந்தது. அதாது 232 போட்டிகளில் விளையாடி 17 சதங்கள் சேசிங்கில் அடித்து உள்ளார். இதுவே நீண்ட நாட்களாக உலக சாதனையாக இருந்தது. ஆனால், 2017ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சேஸிங்கில் கோலி 111 ரன்கள் எடுத்தார்.

எதிர்பார்க்காத சாதனை

எதிர்பார்க்காத சாதனை

இது அவருக்கு சேசிங்கில் 18வது சதமாக இருந்தது. இதன் மூலம், சேஸிங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்னும் சச்சினின் சாதனையை பின்னுக்குத் தள்ளி, கோலி புதிய சாதனையை படைத்தார். இப்படியொரு சாதனையை அவர் படைப்பார் என்று இந்திய கிரிக்கெட் வாரியமே எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை.

சேசிங் சதம்

சேசிங் சதம்

டெண்டுல்கருக்கு, சேசிங்கில் 17 சதங்கள் அடிக்க 232 போட்டிகள் தேவைப் பட்டன. ஆனால், கோலிக்கு வெறும் 102 போட்டிகளில் அந்த சாதனையை முறியடித்தார். அதனால், சேசிங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் 2வது இடத்தில் உள்ளார்.

Story first published: Friday, May 10, 2019, 11:43 [IST]
Other articles published on May 10, 2019
English summary
Sachin tendulkars record beaten by own players like Kohli and Rohit Sharma.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X