For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல்ல கேப்டனை துரத்துங்க..! அப்புறம் பாருங்க.. டீமை எந்த லெவலுக்கு கொண்டு போய் வைக்கிறேன்னு..!!

இஸ்லாமாபாத்: கேப்டன் சர்பிராஸ் அகமதுவை நீக்கிவிட்டு, தமது பதவி காலத்தை 2 ஆண்டுகள் நீட்டித்தால், அணியின் தரத்தை உயர்த்துவதாக கோச் மிக்கி ஆர்தர் கூறியிருக்கிறார்.

உலக கோப்பையில் தொடக்கத்தில் சரிந்த பாக். அணி பின்னர் ஒருவாறாக எழுச்சி கண்டது. ஆனால் அரையிறுதியை எட்ட முடியவில்லை. அணியின் செயல் பாடு கடுமையான விமர்சனத்தை எழுப்பின. கேப்டனின் செயல்பாடுகள் சரி இல்லை, அவரை மாற்ற வேண்டும் என்றும் கருத்துகள் கூறப்பட்டன.

இந் நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து சர்பிராசை நீக்குமாறு கோச் மிக்கி ஆர்தர் குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார். அணியின் எதிர்கால திட்டங்கள் குறித்து சில பரிந்துரைகளை அவர் கிரிக்கெட் வாரியத்துக்கு அளித்திருக்கிறார்.

பாக். பரிந்துரைகள்

பாக். பரிந்துரைகள்

அந்த பரிந்துரைகள் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களால் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்பிராஸ் அகமதுவை தூக்குங்கள், 2 ஆண்டுகளுக்குள் அணியை எங்கு கொண்டு செல்கிறேன் பாருங்கள் என்று மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரைத்திருக்கிறார்.

மாற்றம் உண்டு

மாற்றம் உண்டு

தனக்கு 2 ஆண்டுகள் நீட்டிப்பு அளியுங்கள், அணியை வேறு நிலைக்கு கொண்டு செல்வேன். சர்பிராஸ் அகமதுவுக்கு பதிலாக சதாப் கானை கேப்டனாக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளுக்கு பாபர் ஆசமை கேப்டனாக்க வேண்டும் என்றும் மிக்கி ஆர்தர் பரிந்துரை மேற்கொண்டுள்ளார்.

ஏற்க மறுப்பு

ஏற்க மறுப்பு

ஆனால் மிக்கி ஆர்தரின் வாதங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்க வில்லை என்றும் கூறப்படுகிறது, குறிப்பாக பீல்டிங் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டிவ் ரிக்சனுக்கு சம்பளம் தாமதமாக வழங்கப்பட்டதால் அவர் விலகினார் என்று ஆர்தர் குறிப்பிட்டிருந்தார்.

விருப்பமில்லை

விருப்பமில்லை

அவரது இந்த கருத்து வாரியத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிகிறது. அதன் காரணமாக, ஆர்தரின் பரிந்துரைகள் எந்தளவுக்கு ஏற்கப்படும் என்று தெரியவில்லை.

ஆலோசனை நிராகரிப்பு

ஆலோசனை நிராகரிப்பு

பாகிஸ்தான் வாரியத்தில் உள்ள சிலர், ஜெயவர்த்தனேவை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்ற ஆலோசனை முன் எடுக்கப்பட்டது. ஆனால், ஊதிய விகித்தை கணக்கில் கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை ஏற்க மறுப்பதாக தெரிகிறது.

Story first published: Monday, August 5, 2019, 19:24 [IST]
Other articles published on Aug 5, 2019
English summary
Sack captain sarfaraz ahmed, will make Pakistan team success says coach Mickey Arthur.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X