For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல்ல எவனோ கல்லை விட்டு அடிக்கிறாங்களோன்னு நினைச்சுட்டாராமே சமி...??

டாக்கா: திடீரென பெய்த மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் போட்டி பாதியிலேயே நின்று போய், டக்வொர்த்தி லூயிஸ் முறையில் போட்டியை இலங்கை வென்று கொண்டு போனதை மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் டேரன் சமியால் ஜீரணிக்கவே முடியவில்லையாம்.

நடப்பு டுவென்டி 20 உலக சாம்பியன் மேற்கு இந்தியத் தீவுகள் என்பது நினைவிருக்கலாம்.

போட்டியின்போது திடீரென கல் மாதிரி ஆலங்கட்டி வந்து விழுந்தபோது யாரோ பார்வையாளர் வரிசையிலிருநதுதான் கல்லைத் தூக்கி எறிவதாக முதலில் நினைத்து விட்டாராம் சமி. பிறகுதான் தெரிந்தது அது ஆலங்கட்டி மழை என்று.

டக்வொர்த்தி லூயிஸ் முறை எங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டதாக வருத்தப்பட்டுக் கருத்து தெரிவித்துள்ளார் சமி.

முதல் அரை இறுதி

முதல் அரை இறுதி

உலகக் கோப்பை டுவென்டி 20 தொடரில் நேற்று நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் இலங்கையும், மேற்கு இந்தியத் தீவுகளும் மோதின.

அதிர்ச்சியாப் போச்சே

அதிர்ச்சியாப் போச்சே

இந்தப் போட்டியின்போது திடீரென மழை குறுக்கிட்டு விட்டது. இதனால் போட்டியில் டக்வொர்த்தி லூயிஸ் முறையப் பயன்படுத்தி முடிவை அறிவித்தனர். அதில் இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

27 ரன்கள் வித்தியாசத்தில்

27 ரன்கள் வித்தியாசத்தில்

இந்தப் போட்டியில் டக்வொர்த்தி லூயிஸ் முறையில் 27 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது மேற்கு இந்தியத் தீவுகள் அணியினரை பெரும் சோகத்திலும் ஏமாற்றத்திலும் மூழ்கடித்து விட்டது.

3வது முறையாக இறுதிக்கு இலங்கை

3வது முறையாக இறுதிக்கு இலங்கை

இதையடுத்து 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்று விட்டது.

இடி மின்னலுடன் பேய் மழை

இடி மின்னலுடன் பேய் மழை

முன்னதாக 2வது அணி ஆடியோபோது, 14வது ஓவரின்போது இடி மின்னலுடன் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி பாதிக்கப்பட்டுப் போனது. முன்னதாக முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்ளைக் குவித்திருந்தது. பின்னர் ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் மழை குறுக்கிட்டபோது 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள்தான் எடுத்திருந்தது.

ஆலங்கட்டியைப் பார்த்து பயந்த சமி

ஆலங்கட்டியைப் பார்த்து பயந்த சமி

முன்னதாக மழை பெய்தபோது தன் மீது கல் போன்று வந்து விழுந்ததைப் பார்த்து ஆடியன்ஸ் சைடிலிருந்துதான் கல் வீசுகிறார்களோ என்று பயந்து போய் விட்டாராம் கேப்டன் சமி. ஆனால் விழுந்தது ஆலங்கட்டி என்று பின்னர் தெரியவந்து அமைதியானாராம்.

Story first published: Friday, April 4, 2014, 17:09 [IST]
Other articles published on Apr 4, 2014
English summary
A dejected West Indies captain Darren Sammy said it was "disappointing" and "sad" for the defending champions to exit from the ICC World Twenty20 after losing to Sri Lanka via Duckworth-Lewis method in the rain-marred semifinal at the Shere Bangla Stadium here. A dominant Sri Lanka made it to summit clash for the third time knocking out West Indies by 27 runs via the Duckworth-Lewis method after thundershowers stopped proceedings in the 14th over of the second innings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X