For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Exclusive: "அது" மட்டும் நடந்துச்சுன்னா WTC Final கப் நியூசிலாந்துக்கு தான்-சடகோபன் ரமேஷ்

சென்னை: எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்தும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்தும், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், நமது தமிழ் மைக்கேல் தமிழ் தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

வரும் ஜூன் 18ம் தேதி, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களமிறங்க விராட் கோலி தலைமையிலான அணி தயாராகி வருகிறது.

இந்திய வீரர்கள் ரசித்து ருசிக்கும் இங்கிலாந்து உணவுகள்.. அஷ்வின் இந்திய வீரர்கள் ரசித்து ருசிக்கும் இங்கிலாந்து உணவுகள்.. அஷ்வின்

இங்கிலாந்தை அதன் மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றிருக்கும் நியூசிலாந்து அணி, இந்தியாவை மிக எளிதாக வீழ்த்தும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறும் நிலையில், சடகோபன் ரமேஷ் என்ன பதில் அளித்துள்ளார் தெரியுமா?

வீரர்கள் பட்டியல்

வீரர்கள் பட்டியல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தொடங்க காத்திருக்கிறது. இந்த நிலையில், பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இப்போ மாறிப்போச்சு

இப்போ மாறிப்போச்சு

பலமான அணி என்று பலரும் கூறினாலும், கடந்த வாரம் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இங்கிலாந்தை அதன் மண்ணிலேயே வைத்து வீழ்த்தி வெற்றிப் பெற்றது நியூசிலாந்து. இதனால், 50 - 50 என்று கூறி வந்த எக்ஸ்பெர்ட்ஸ் பலரும், இப்போது நியூசிலாந்து பக்கம் தான் வெற்றிக் காற்று வீசுவதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நாம் நேரடியாக முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷிடம் கேள்வி எழுப்பி இருந்தோம்.

ஸ்விங் கண்டிஷன்ஸ்

ஸ்விங் கண்டிஷன்ஸ்

இதுகுறித்து அவர் கூறுகையில், " சவுத்தாம்ப்டன் பிட்ச் கொஞ்சம் Slowish-ஷா இருக்க வாய்ப்பிருக்கு. இங்கிலாந்துல, விக்கெட் எப்படி இருக்கும் என்பது நம்மால பிரெடிக் பண்ண முடியாது. Grass கொடுக்குறாங்களா, இல்ல கண்டிஷன்ஸ் Fast Bowling-க்கு சாதகமா இருக்குமோ நமக்கு தெரியாது. கோலி அதை வச்சு டீம் ஃபைனல் பண்ண முடியும். ஸோ, மேட்ச் ஆரம்பிக்குற 24 மணி நேரத்துக்கு முன்னாடி தான், டீம் பற்றி யோசிக்க முடியும். கோலியும் ஸ்விங் கண்டிஷன்ஸ், பிட்ச் இதெல்லாம் பார்த்த பிறகு தான் முடிவெடுப்பார்.

chill கண்டிஷன்ஸ்

chill கண்டிஷன்ஸ்

இந்த போட்டியில், வெற்றிக்கு அதிக சான்ஸ் இருப்பது நியூசிலாந்துக்கு தான். ஏன்னா, இங்கிலாந்து கண்டிஷன்ஸ், அவங்களுக்கு ஏற்ற கண்டிஷன்ஸ். ஒருவேளை நல்ல பேட்டிங் பிட்ச்சா இருந்தால், இந்தியாவுக்கும் வாய்ப்பிருக்கு. ஐந்து நாள் நடக்கப் போற இந்த டெஸ்ட் மேட்சுல, இரண்டு நாள் நல்லா காற்று வீசினாலோ, chill கண்டிஷன்ஸ் இருக்குதுனாலோ அது நியூசிலாந்துக்கு தான் அட்வாண்டேஜா மாறும். ஏன்னா, அவங்களுக்கு அது நார்மலான விஷயம். ஸோ, 55 - 45 என்ற விகிதத்தில் நியூஸிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு என்பது என்னோட கணிப்பு" என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, June 16, 2021, 14:16 [IST]
Other articles published on Jun 16, 2021
English summary
sadagoppan exclusive interview wtc final - இந்திய அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X