For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Exclusive: "வச்சு உதைச்சு அனுப்பிருக்கோம்.. திருப்பி அடிக்க ரெடியா இருப்பாங்க" - சடகோபன் ரமேஷ்

சென்னை: எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்தும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்தும், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், நமது தமிழ் மைக்கேல் தமிழ் தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

வரும் ஜூன் 18ம் தேதி, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களமிறங்க விராட் கோலி தலைமையிலான படை தயாராகி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்று வென்று கெத்து காட்டும் நியூசிலாந்து அணி, இந்தியாவையும் பதம் பார்க்கும் என்று பல எக்ஸ்பெர்ட்ஸ் கூறும் நிலையில், நாம் முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷை தொடர்பு கொண்டு பேசினோம். இனி அவரது வார்த்தைகளாக..

sadagoppan ramesh exclusive interview on wtc final and england series

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஒரே போட்டியாக இல்லாமல், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருந்திருக்கணும்-னு நிறைய முன்னாள் வீரர்கள் சொல்லி இருக்காங்க. இதில் உங்க கருத்து என்ன?

இது ரொம்ப கடினமான விஷயம். இதுக்கு அவங்க முதல்லயே பிளான் பண்ணி இருந்திருக்கணும். அதுவும், இந்த கொரோனா சூழல்ல, மூன்று டெஸ்ட் மேட்ச் நடத்துறது என்பது பெரிய ரிஸ்க். திடீர்னு மேட்ச்சை நிறுத்துற மாதிரி சூழல் ஏற்பட்டால், ஒன்னும் பண்ண முடியாது.

ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர்ஸ் இந்தியாவிடம் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துமா?

பவுலிங் ஆல் ரவுண்டர்ஸ் கண்டிப்பா அணிக்கு தேவை. 6வது 7வது டவுனில் இறங்கி விளையாடும் முக்கியமான வேலை அவர்களோடது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஏற்பட்ட காயத்துக்கு அப்புறம், அவர் தொடர்ந்து பவுலிங் பண்ணி நாம பார்க்கல. டி20-ன்னா நீங்க ஜஸ்ட் 4 ஓவர் வீசினா போதும். ஒன் டே மேட்ச்ன்னா 6 ஓவர் போட்டு, பாக்கி 4 ஓவர வேற பவுலர வீச வச்சு மேனேஜ் பண்ணிடலாம். ஆனால், டெஸ்ட் மேட்சுல, ஹர்திக் ஒரு எக்ஸ்க்ளூசிவ் ஆல் ரவுண்டரா விளையாடுறார்-னா 25 - 30 ஓவர் வீசுற அளவுக்கு எபிலிட்டி இருக்கணும். I'm talking about Physical Fitness. Unfortunately, இப்போ ஹர்திக் பாண்ட்யா அளவுக்கு திறமையான, குவாலிட்டியான ஆல் ரவுண்டர்ஸ் நம்மகிட்ட இல்லை இப்போதைக்கு. யெஸ்.. ஒரு கேப்டன் அந்த மாதிரியான ஆல் ரவுண்டரை நிச்சயம் விரும்புவார். அப்படி இல்லங்கிற பட்சத்துல, Honestly நம்மகிட்ட இருக்குற சோர்ஸை வச்சுத் தான் நாம விளையாண்டாகனும்.

ஆல் ரவுண்டர்ஸ் தொடர்பான கேள்வி தான் இதுவும். இப்போது நம்மிடம் இருக்கும் பவுலிங் ஆல்ரவுண்டர்ஸ் அஷ்வின், ஜடேஜாவால் இங்கிலாந்தின் ஸ்விங் பிட்சில் சிறப்பாக செயல்பட முடியுமா?

கண்டிப்பா நல்லா விளையாடுவாங்க. நீங்க ஆஸ்திரேலியாவுல அஷ்வின் விளையாண்ட விதத்தை பார்த்திங்கன்னா அதுல aggression இருக்கும். முன்னாடி அஷ்வின் மூன்று வித கிரிக்கெட்டிலும் விளையாடிக்கிட்டு இருந்தார். மூணு ஃபார்மட் கிரிக்கெட்டிலும் பவுலிங் ஸ்டைலை மாற்றி மாற்றி பவுல் பண்றது ரொம்ப கஷ்டம். ஆனால், இப்போ அவர் டெஸ்ட் மட்டும் விளையாடுறதால, ஒரு டெஸ்ட் மேட்சுக்கு என்ன தேவையோ அதை மட்டும் நல்லா பண்ணிட்டு இருக்கார். Definite- ஆ அவரோட அக்ரெஸிவ் சேஞ் பண்ணிருக்கார். பந்தை அழகா Flight செய்து, பேட்ஸ்மேனை deceive பண்ணினார். In Australia that's what i saw.

இன்னொரு பக்கம் ஜடேஜா.. என்னை பொறுத்தவரை, Overall-ஆ கிரிக்கெட்டர்ஸ்-ல தன்னை பயங்கரமான இம்ப்ரூவ் பண்ணியிருக்கிற ஒரே பிளேயர்-னா அது ஜடேஜா தான். டெஸ்ட் மேட்ச்-ல பேட்டிங்லயும் அவர் மேட்ச் வின்னர் தான். ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் டர்னிங் பாயிண்ட்டே, ரஹானேவுடன் அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் தான். ஸோ, abroad-ல பேட்டிங்லயும் கைக்கொடுக்குற அளவுக்கு வளர்ந்திருக்கார் ஜடேஜா. ஸோ, அஷ்வின் - ஜடேஜா ஜோடி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் நல்ல பெர்ஃபாம் பண்றாங்க. கண்டிப்பாக இது கோலிக்கு மிகப்பெரிய அட்வான்டேஜ்.

கோலி vs வில்லியம்சன்.. யார் சிறந்தவர்? ஆச்சரியமளிக்கும் புள்ளி விவரம்.. ரசிகர்களுக்கு விருந்து ரெடி!கோலி vs வில்லியம்சன்.. யார் சிறந்தவர்? ஆச்சரியமளிக்கும் புள்ளி விவரம்.. ரசிகர்களுக்கு விருந்து ரெடி!

நீங்க சொல்றத வச்சுப் பார்த்தா, டீம்ல 6 பேட்ஸ்மேன்ஸ், 5 பவுலர்ஸ் அப்டிங்குற '6+5' ஃபார்முலாவுல ஸ்குவாட் ரெடி பண்ணா பெட்டரா இருக்கும்-னு நினைக்குறீங்களா? அந்த 5 பவுலர்ஸ்-ல அஷ்வினும், ஜடேஜாவும் இருக்கணும்-னு சொல்றீங்களா?

சவுத்தாம்ப்டன் பிட்ச் கொஞ்சம் Slowish-ஷா இருக்க வாய்ப்பிருக்கு. இங்கிலாந்துல, விக்கெட் எப்படி இருக்கும் என்பது நம்மால பிரெடிக் பண்ண முடியாது. Grass கொடுக்குறாங்களா, இல்ல கண்டிஷன்ஸ் Fast Bowling-க்கு சாதகமா இருக்குமோ நமக்கு தெரியாது. கோலி அதை வச்சு டீம் ஃபைனல் பண்ண முடியும். பட், As of now, ஃபாஸ்ட் பவுலர்ஸ், இரண்டு ஸ்பின்னர்ஸ் எடுக்குற மாதிரி தான் விக்கெட் இருக்கு. ஸ்விங்கிங் கண்டிஷன்ஸ் ரொம்ப இல்லாம இருந்தா, கண்டிப்பா இந்த ரெண்டு பிளேயர்ஸும், டீமுல இருக்கணும்-ங்கறதைத் தான் கோலி விரும்புவார். ஸோ, மேட்ச் ஆரம்பிக்குற 24 மணி நேரத்துக்கு முன்னாடி தான், டீம் பற்றி யோசிக்க முடியும். கோலியும் ஸ்விங் கண்டிஷன்ஸ், பிட்ச் இதெல்லாம் பார்த்த பிறகு தான் முடிவெடுப்பார்.

பவுலிங் யூனிட்டில் இன்னொரு கேள்வி. சிராஜ் ஆஸ்திரேலியாவில் லீடிங் விக்கெட் டேக்கராக இருந்தார். ஐபிஎல்-லயும் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசன்ல நல்லா பவுல் பண்ணார். ஸோ, இஷாந்துக்கு பதிலா, சிராஜை டீம்-ல சேர்க்கணும்-னு நிறைய பேர் சொல்றாங்களே?

நான் இஷாந்தை வைத்துதான் விளையாடுவேன். ஏன்னா போன சீரிஸ் நல்லா விளையாடி இருக்கார். ரெண்டாவது, Experienced Bowler. பும்ரா, ஷமியை விட அனுபவம் வாய்ந்த ஒரு பவுலர். இன்னொரு விஷயம், இங்கிலாந்திடம் நிறைய லெஃப்ட் ஹேண்டர்ஸ் இருக்காங்க. Ishant is always a good bowler for Left Handers. ஸோ, இஷாந்துக்கு தான் கோலி முன்னுரிமை கொடுப்பார். நீங்க இஷாந்தை விட்டுட்டு சிராஜை எடுத்தா, டீம்ல அனுபவ பவுலர் யார்-னு பார்த்தா ஷமியாகத் தான் இருப்பார். ஸோ, இஷாந்தை நிச்சயம் கோலி Utilize பண்ணுவார்.

உலக டெஸ்ட் சாம்பியனா வலம் வரப் போவது யார்? உங்கள் கெஸ்?

அதிக சான்ஸ் இருப்பது நியூசிலாந்துக்கு தான். ஏன்னா, இங்கிலாந்து கண்டிஷன்ஸ், அவங்களுக்கு ஏற்ற கண்டிஷன்ஸ். ஒருவேளை நல்ல பேட்டிங் பிட்ச்சா இருந்தால், இந்தியாவுக்கும் வாய்ப்பிருக்கு. ஐந்து நாள் நடக்கப் போற இந்த டெஸ்ட் மேட்சுல, இரண்டு நாள் நல்லா காற்று வீசினாலோ, chill கண்டிஷன்ஸ் இருக்குதுனாலோ அது நியூசிலாந்துக்கு தான் அட்வாண்டேஜா மாறும். ஏன்னா, அவங்களுக்கு அது நார்மலான விஷயம். ஸோ, 55 - 45 என்ற விகிதத்தில் நியூஸிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு என்பது என்னோட கணிப்பு.

இந்தியன் டீமோட 'X-Factor' பிளேயர் யார்? அதேபோல், நியூசிலாந்துக்கு யார்?

இந்த மாதிரி முக்கியமான மேட்சுல உங்களோட நம்பர்.7 ரொம்ப Crucial. ஒன்னு சீக்கிரமா அவுட்டாகிடுவாங்க. இல்ல.. வேகமா அடிச்சு, ஒரு நல்ல ஸ்கோருக்கு கொண்டுட்டு போவாங்க. இன்னொரு சிக்கல், அவங்க செகண்ட் நியூ பால் ஆடணும். நிறைய நேரத்தில், நம்பர்.6 அல்லது நம்பர்.7ல் ஆடுபவர்கள் செகண்ட் நியூ பந்தில் விளையாட வேண்டியிருக்கும். ஸோ, அந்த வகையில் ரிஷப் பண்ட் நம்மோட 'X-Factor' பிளேயரா இருக்கலாம். அவர் செம ஃபார்மில் இருக்கார். ரெண்டு மணி நேரம், மூணு மணி ஆடுனார்-னா இந்தியாவுக்கு அது மிகப்பெரிய அட்வான்டேஜ்.

அதேமாதிரி, நியூசிலாந்தின் 'X-Factor' டிரெண்ட் போல்ட் தான். லெஃப்ட் ஆர்ம் ஃபாஸ்ட் பவுலர். புது பந்துல அட்டகாசமா வீசுவார். ரோஹித், கோலி மாதிரியான பிளேயர்ஸை காலி பண்ணார்னா நியூசிலாந்து Driver Seat-ல டிராவல் பண்ணுவாங்க.

இங்கிலாந்து சீரிஸ்-ல ஒருவேளை இந்தியா பெரும் தோல்வியை சந்தித்தால், விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன் பதவிக்கு ஆபத்து வருமா? கிரண் மோரே 'ஸ்ப்லிட் கேப்டன்சி' குறித்து பேசியதால் இந்த கேள்வியை முன்வைக்கிறேன்.

இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறன். இந்திய ஃபைனல்ஸ வந்திருக்கு. ஆஸ்திரேலியா, சவுத் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளை தாண்டி இந்தியா ஃபைனல்ஸ் வந்திருக்கு என்றால், அது டாப் கிளாஸ் பெர்ஃபாமன்ஸ். ஸோ, வர்ற டி20 வேர்ல்டு கப் முடிஞ்ச பிறகு தான், கேப்டனை மாற்றலாமா, வேண்டாமா-ங்கிறதெல்லாம் யோசிப்பாங்க. அதைத் தான் Platform-மா எடுத்துக்க முடியும். டி20 கிரிக்கெட் வரை மிகப்பெரிய மாற்றத்தை பற்றி யோசிக்க மாட்டார்கள். நீங்க ஒரே கேப்டன் தலைமையில் விளையாடினால் தான் அணி ஒழுங்காக விளையாட முடியும். ஏன்னா.. ஒரு கேப்டன் இருந்தா, அவர் சிந்தனையில் தான் அணி செயல்படும். வெவ்வேறு கேப்டன் இருந்தால், வெவ்வேறு மோடுல டீம் இயங்குறது கஷ்டம்.

ஆனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே இந்த 'Split Captaincy' சிஸ்டம் ஃபாலோ பன்றாங்க. அதை பின்பற்றி தானே, இங்கிலாந்து முதன்முறையா வேர்ல்டு கப் ஜெயிச்சிருக்காங்க?

நாம அடுத்தவங்கள எப்போதும் காப்பி அடிக்க கூடாது. எப்பவுமே நாம பேசுற விஷயம் என்னன்னா, அவன் அதை பன்றான், இவன் இதை பன்றான்-னு சொல்றது தான். இன்னும் இங்கிலாந்து சீரிஸ் இருக்கு, அடுத்து ஐபிஎல் இருக்கு, அதுக்கு அப்புறம் டி20 வேர்ல்டு கப் இருக்கு. இது எல்லாத்துலயும் தோற்றால் நாம யோசிக்கலாம். ஆனால், வேர்ல்டு கப் என்கிற மிகப்பெரிய தொடருக்கு முன்னாடி வேற எதுவும் பெருசில்ல. ஸோ, அதுவரைக்கும் அணியில் எந்த மாற்றமும் இருக்காது.

இயன் மோர்கன், பிரண்டன் மெக்குல்லம், ஜோஸ் பட்லர் ஆகியோர் இந்திய ரசிகர்களின் ஆங்கில புலமையை கிண்டல் செய்யும் விதமாக சில வருடங்களுக்கு முன் ட்வீட் செய்தது இப்போது சர்ச்சை ஆகியுள்ளது. உங்கள் கருத்து?

ஒருவேளை அவர்கள் இப்படி கிண்டல் செய்து ட்வீட் செய்திருந்தது உண்மையாக இருந்தால், அது ரொம்பவே வருத்தமான விஷயம் தான். இந்திய ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மீது அன்பை பொழிவாங்க. க்றிஸ் கெயிலா இருந்தாலும், ஏபி டி வில்லியர்ஸா இருந்தாலும், விராட் கோலியா இருந்தாலும், அவங்களுக்கு பிடிச்சிருந்தா தலையில தூக்கி வச்சு கொண்டாடுவாங்க. அப்படி பாரபட்சம் இல்லாம, அன்பும், மரியாதையும் கொடுப்பாங்க. ஸோ, அந்த மாதிரி ரசிகர்களுக்கு, வீரர்களும் அதே மரியாதை கொடுத்தா அழகா இருக்கும். கிரிக்கெட்-னு இல்ல.. எந்த விளையாட்டா இருந்தாலும், ரசிகர்களுக்கும் அவர்கள் தரும் அதே மரியாதையை கொடுக்க வேண்டும்.

கடைசி கேள்வி.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு, இங்கிலாந்துக்கு எதிரா 5 மேட்ச் கொண்ட டெஸ்ட் சீரிஸ் இருக்கு? இதில், யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

"இது ரொம்பவே சுவாரஸ்யமான சீரிஸாக இருக்கப் போகுது. இங்கிலாந்தை நாம இங்க வச்சு உதை உதை-னு உதைச்சிருக்கோம். ஸோ, இப்போ அங்க என்ன மாதிரியான விக்கெட்ஸ் ரெடி பண்ணப் போறாங்கன்னு தெரியல. இந்தியாவை திருப்பி அடிக்கணும்-னு காத்துக்கிட்டு இருப்பாங்க. ஸோ, சேலஞ் கடுமையா இருக்கும். இன்னும் சொல்லணும்-னா, இந்தியா ஆஸ்திரேலியாவில் ஆடுனதை விட, இந்தியா இப்போ இங்கிலாந்துல ஆடப் போறது ரொம்ப சவாலானதா இருக்கும். நானும் உங்களைப் போல் அதற்கு தான் காத்துக்கிட்டு இருக்கேன்.. பார்க்கலாம்" என்று சொல்லி விடைபெற்றார்.

Story first published: Tuesday, June 15, 2021, 19:38 [IST]
Other articles published on Jun 15, 2021
English summary
sadagoppan ramesh interview on wtc final - உலக டெஸ்ட் பைனல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X