சிஎஸ்கேவுக்கு எதிராக செய்யனுமா? முடியவே முடியாது..! கிறிஸ் கெயிலிடம் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ்

கோவை: மண்ணை பாதுகாப்போம் என்று சத்குரு ஜக்கிவாசுதேவ் ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி வருகிறார்.

KKR கிட்டயே முடியாதுனு சொல்லிட்டேன்.. Chris Gayle-யிடம் Sadhguru சொன்ன தகவல் #Cricket

இதன் ஒரு பகுதியாக, சத்குரு ஜக்கி வாசுதேவ், பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுடன் காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

ஆன்மீகம், யோகா போன்ற விசயங்களில் கவனம் செலுத்தி வந்த சத்குரு, கடந்த சில வருடங்களாக பொது பிரச்சினை குறித்தும் பேசி வருகிறார்.

சத்குருவின் இயக்கங்கள்

சத்குருவின் இயக்கங்கள்

காவிரி நதி நீருக்காக காவிரி காலிங் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை சத்குரு ஏற்படுத்தினார். இதே போன்று தமிழக கோயில்களை சீரமைக்கவும், கோயில் நிர்வாகத்திலிருந்து அரசு வெளியேற வேண்டும் என்றும் இயக்கங்களை சத்குரு நடத்தினார். தற்போது Save soil என்ற இயக்கத்தை சத்குரு நடத்தி வருகிறார். இது தொடர்பாக நடைபெற்ற உரையாடலில், ஐபிஎல் தொடரில் உங்களுக்கு பிடித்த அணி எது என்று கிறிஸ் கெயில், சத்குருவிடம் கேள்வி கேட்டார்.

கெயில் கேட்ட கேள்வி

கெயில் கேட்ட கேள்வி

அதற்கு நகைச்சுவையாக சிரித்த சத்குரு, நான் தமிழன் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் எனக்கு பிடிக்கும் என்று கூறினார். இதனை கேட்டதும் கெயில், தனது இயலாமையை வெளிப்படுத்துவது போல் கத்தினார். இதன் பின்னர் பேசிய சத்குரு, கடந்த முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியும், கேகேஆர் அணியும் மோதின.

சிஎஸ்கே குறித்து சத்குரு

சிஎஸ்கே குறித்து சத்குரு

அப்போது இறுதிப் போட்டிக்கு முன்பு கேகேஆர் அணி சார்பாக என்னை தொடர்பு கொண்டு பேசினர். இறுதிப் போட்டியில் விளையாடும் தங்கள் அணியை ஆசீர்வாதம் செய்யுங்கள் என கேட்டனர். உடனே உங்களுக்கு எதிராக யார் விளையாடுகிறார்கள் என்று கேட்டேன்.

ஆசீர்வாதம் செய்யவில்லை

ஆசீர்வாதம் செய்யவில்லை

அதற்கு சிஎஸ்கே என்று பதில் வந்தது. உடனே சென்னை அணிக்கு எதிராக நான் ஏதும் செய்ய முடியாது என்று கூறி ஆசீர்வாதம் செய்ய மறுத்துவிட்டேன் என்று கூறினார். இதனை கேட்டதும் புல்லரித்து போன கெயில், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் நம்பர் 1 அணி என்றும், தோனி சிறந்த கேப்டன் என்றும் பாராட்டினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sadhguru and chris Gayle conversation about IPL and csk in save soil campaign சிஎஸ்கேவுக்கு எதிராக செய்யனுமா? முடியவே முடியாது..! கிறிஸ் கெயிலிடம் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ்
Story first published: Wednesday, May 18, 2022, 21:36 [IST]
Other articles published on May 18, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X