For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த மாதிரி நேரத்துல இப்படிதான் செய்வீங்களா... வெக்கமா இருக்கு... ஆங்க்ரி பேர்ட் ஆன சாக்ஷி

ராஞ்சி : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நன்கொடை வழங்க துவங்கியுள்ளனர்.

Recommended Video

இந்த மாதிரி நேரத்துல இப்படித்தான் செய்வீங்களா? - கடுப்பான ஷாக்ஷி

இந்நிலையில் தொண்டு நிறுவனம் மூலம் க்ரவுட் பண்டிங் முறையில் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியதாக கூறப்பட்டது.

இதையடுத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கொண்டுள்ள எம்எஸ் தோனி இந்த இக்கட்டான சூழலில் 1 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்ததுகுறித்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து தள்ளினர். இதுகுறித்துதான் சாக்ஷி தோனி ஆத்திரம் அடைந்துள்ளார்.

சச்சின் ரூ.50 லட்சம் நன்கொடை

சச்சின் ரூ.50 லட்சம் நன்கொடை

கொரோனா வைரஸ் பாதிப்பையடுத்து சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு வீரர்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். மெஸ்ஸி, பெடரர் உள்ளிட்ட வீரர்கள் கோடிக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவிலும் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி 50 லட்சம் ரூபாய்க்கு அரிசி கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

தோனி ரூ.1 லட்சம் நன்கொடை

தோனி ரூ.1 லட்சம் நன்கொடை

பிவி சிந்து 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ள நிலையில் பல்வேறு வீரர்கள், வீராங்கனைகள் தங்களது சம்பளத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். இந்நிலையில் பூனாவை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு க்ரவுட் பண்டிங் முறையில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்ததாக கூறப்பட்டது.

ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை

இதையடுத்து சமூக வலைதளத்தில் நெட்டீசன்கள் தோனியை கலாய்த்து தள்ளிவிட்டனர். 800 கோடி ரூபாய் சொத்துக்களை கொண்டுள்ள எம்எஸ் தோனி, வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி அளித்துள்ளது குறித்து அவர்கள் பல்வேறு கமெண்ட்டுகளை போட்டனர். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது.

வெட்கம் கொள்வதாக பதிவு

இதையடுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஆத்திரத்துடன் சாக்ஷி தோனி பதிவிட்டுள்ளார். இத்தகைய நெருக்கடியான நேரத்தில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அவர் கோரியுள்ளார். மேலும் இந்த தவறான செய்தி குறித்து வெட்கம் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். பொறுப்பான ஜர்னலிசம் எங்கே போனது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Story first published: Friday, March 27, 2020, 19:05 [IST]
Other articles published on Mar 27, 2020
English summary
Sakshi slams Media for carrying out false news about her husband's donation for coronavirus fight
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X