For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்க ஊர்ல ஐபிஎல் நடக்கப்போகுது.. தோனி ஆடப் போறாரு! காலரை தூக்கிவிட்டு கெத்து காட்டிய சேலம் இளைஞர்கள்

சேலம் : சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது.

அந்த கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் உறுதியாக தெரிவித்தார்.

இதையடுத்து சேலம் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகத் தொடங்கியது. சேலத்தை சேர்ந்த இளைஞர்கள் பலரும் தங்கள் ஊரில் துவங்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

புதிய கிரிக்கெட் மைதானம்

புதிய கிரிக்கெட் மைதானம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் என்ற அமைப்பின் சார்பில் 16 ஏக்கர் பரப்பில், பல கோடி மதிப்பில் பிரம்மாண்டமான முறையில் புதிய கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா ஞாயிறு அன்று காலையில் நடைபெற்றது.

ராகுல் டிராவிட் பங்கேற்பு

ராகுல் டிராவிட் பங்கேற்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 9 மணிக்கு இந்த புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். மேலும், துவக்க விழாவில் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

16 ஏக்கர் பரப்பு

16 ஏக்கர் பரப்பு

இந்த கிரிக்கெட் மைதானம் சேலம் மாவட்டம் காட்டு வேப்பிலைப்பட்டியில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் ஐந்து பிட்ச்கள் உள்ளன. இதில் இன்னும் பார்வையாளர் பகுதிகள் உருவாக்கப்படவில்லை. அவை விரைவில் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சீனிவாசன் பேச்சு

சீனிவாசன் பேச்சு

இந்த விழாவில் தற்போதைய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர். சீனிவாசன் இந்த விழாவில் இந்த மைதானத்தில் எதிர்காலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்றார்.

ஐபிஎல் நடைபெறும்

ஐபிஎல் நடைபெறும்

சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் கூறுகையில், இந்த மைதானத்தில் அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்றும், தோனி நிச்சயம் இந்த மைதானத்தில் ஆடுவார் என்றும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த தகவல் சேலம் மாவட்ட கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வேகமாக பரவியது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

அவர்கள் இந்த செய்தியை இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர். தங்கள் ஊரில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது என தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சில பதிவுகளை மட்டுமே இங்கே பார்க்கலாம்.

இரண்டாவது சொந்த மைதானம்

சேலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டாவது சொந்த மைதானம் ஆகி விட்டது என ஒரு ரசிகர் கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். சென்னை சேப்பாக்கம் மைதானம் தான் சிஎஸ்கே அணியின் சொந்த மைதானம் ஆகும். இனி சேலம் மைதானத்திலும் அந்த அணி ஆடும் என குறிப்பிட்டுள்ளார்.

நானும் கெத்தா சொல்லுவேன்

"சேலம் மாவட்டம் வாழ்ப்பாடியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் இன்று திறக்கட்டுள்ளது. விரைவில் ஐபிஎல் போட்டிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. நானும் கெத்தா சொல்லுவேன் எங்க ஊரு சேலம்டா" என ஒரு ரசிகர் காலரை தூக்கி விட்டு கொண்டாடி இருக்கிறார்.

வெறி ஆகுதே

"என்னாது சேலத்தில் ஐபிஎல் மேட்ச் நடக்கப் போகுதா? வெயிட்டிங் -லையே வெறி ஆகுதே" என ஒரு ரசிகர் வெறித்தனமாக பதிவிட்டு இருக்கிறார். எப்படியும் 2021 அல்லது அதற்கும் மேல் தான் ஐபிஎல் போட்டிகள் அங்கே நடைபெறும் என கூறப்படுகிறது.

சிட்னி மைதானம்

இந்தியாவின் சிட்னி மைதானமாக சேலம் மைதானம் இருக்கும். கூடுதல் சிறப்பு - ஐபிஎல் -இல் சிஎஸ்கே அணியின் இரண்டாவது சொந்த மைதானமாக இது இருக்கும் மற்றும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் நிச்சயமாக ஐபிஎல் போட்டி இங்கு நடைபெறும் என்று சீனிவாசன் அவர்கள் கூறியுள்ளார் என ஒரு ரசிகர் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.

Story first published: Sunday, February 9, 2020, 15:33 [IST]
Other articles published on Feb 9, 2020
English summary
Salem Hashtag trending after new cricket stadium in the Tamilnadu town.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X