For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி முடிவால பாதிக்கப்பட போறது பௌலர்கள்தான்.. இதனால பேட்ஸ்மேனுக்கு பாதிப்பு இருக்காது

டெல்லி : பந்துகளை ஷைன் செய்வதற்கு எச்சிலை பயன்படுத்துவதற்கு மாற்றாக வேறு எதை செய்தாலும் சிறப்பான பலனை தராது என்று முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.

எச்சில் தடையால் பேட்ஸ்மேன்கள் மற்றும் விக்கெட் கீப்பர்கள் பாதிக்கப்பட போவதில்லை என்றும் பௌலர்களே பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

போட்டிகளின்போது பந்துகளை மாற்றுவது மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துவது போன்றவற்றை வேண்டுமானால் எச்சிலுக்கு மாற்றாக செயல்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

என் பையனை முதல்ல காப்பாத்துங்க.. மகனைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்த பிரபல WWE வீரர்.. ரசிகர்கள் ஷாக்!என் பையனை முதல்ல காப்பாத்துங்க.. மகனைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்த பிரபல WWE வீரர்.. ரசிகர்கள் ஷாக்!

மாற்று வழிமுறைகள்

மாற்று வழிமுறைகள்

கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும்வகையில் பந்துகளை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்த தடையும் வியர்வையை பயன்படுத்த ஒப்புதலும் அளிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பினாலும் மாற்று வழிமுறைகளையும் பல வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் 2 பந்துகளை பயன்படுத்த ஹர்பஜன் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

பௌலர்கள் பாதிக்கப்படுவார்கள்

பௌலர்கள் பாதிக்கப்படுவார்கள்

இந்நிலையில் பந்துகளை ஷைன் செய்வதற்கு எச்சிலை பயன்படுத்துவதற்கு மாற்றாக வேறு எதை செய்தாலும் சிறப்பான பலனை தராது என்று முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார். பௌலர்களின் முக்கியமான, அவசியமான ஆயுதமாக இருக்கும் இந்த வழக்கத்திற்கு தடை விதிப்பதால் பௌலர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாற்று குறித்து யோசிக்க வேண்டும்

மாற்று குறித்து யோசிக்க வேண்டும்

எச்சிலை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதால் பேட்ஸ்மேன்கள் மற்றும் விக்கெட் கீப்பர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்படவுள்ள பௌலர்கள், எதை மாற்றாக பயன்படுத்துவார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிருமிநாசினி பயன்படுத்தலாம்

கிருமிநாசினி பயன்படுத்தலாம்

போட்டிகளின்போது பந்துகளை மாற்றுவது மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துவதும் சிறப்பானதாக இருக்கும் என்றும் தாஸ்குப்தா சுட்டிக் காட்டியுள்ளார். இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சரியாக இருக்கும் என்றும் ஸ்பின்னர்களுக்கு சிறிதளவு பலனளிக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். நார்மலான ஸ்விங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் போன்றவற்றிற்கு எச்சிலே சிறந்த பலனை கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, May 21, 2020, 14:09 [IST]
Other articles published on May 21, 2020
English summary
I can't think of anything else that can replace saliva: Deep Dasgupta
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X