For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மோர்கன் அதற்கு சரிபட்டு வரமாட்டார்.. தோனிதான் பெஸ்ட்.. புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

பாகிஸ்தான்: சிறந்த வியூகங்களை அமைக்கக்கூடிய கேப்டன்களுக்கு உதாரணம் தோனி, ரோகித் சர்மா என பாகிஸ்தான் முன்னாள் வீரர் புகழ்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றி மிக முக்கிய இடத்தை பிடித்தவர் மகேந்திர சிங் தோனி. 2007 முதல் 2016 வரை இந்திய அணியை அனைத்து வடிவ போட்டிகளிலும் டாப் இடத்தில் வைத்திருந்தவர்.

சைவமா? அசைவமா? கோலியின் ட்வீட்டால் இணையத்தில் புலம்பும் ரசிகர்கள்.. அப்படி என்ன செய்தார்? சைவமா? அசைவமா? கோலியின் ட்வீட்டால் இணையத்தில் புலம்பும் ரசிகர்கள்.. அப்படி என்ன செய்தார்?

2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் போது சீனியர் வீரர்கள் ஒதுங்கி நின்ற போது, தைரியமாக இந்திய அணியை வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்ததில் தொடங்கிய அவரது பயணம் நெடுந்தூரம் சென்றது.

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு

இந்தியர்களின் நீண்ட வருட கனவாக இருந்த 50 ஓவர் உலகக்கோப்பையை கடந்த 2011ம் ஆண்டு தனது மேட்ச் ஃபினிசிங் சிக்ஸர் மூலம் அசத்தலாக வென்று கொடுத்தார் தோனி. அதுமட்டுமல்லாமல் ஐசிசி-ன் மூன்று கோப்பைகளையும் வென்று கொடுத்த முதல் கேப்டன் என்ற பெருமையும் தோனியையே சேர்ந்தது. இதேபோல ஐபிஎல்-ல் சிஎஸ்கே அணிக்காக 3 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

ரசிகரின் கேள்வி

ரசிகரின் கேள்வி

இந்நிலையில், தோனிதான் உலகின் சிறந்த வியூகம் அமைக்கக்கூடிய கேப்டன் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார். பந்து வீச்சாளர்களின் சொதப்பல் எப்படி கேப்டனின் வியூகத்தை தவறாக காட்டுகிறது என சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல, டூப்ளசிஸ் மற்றும் இயான் மோர்கனின் பேட்டிங் எப்படி உள்ளது என கேட்டிருந்தார்.

சிறந்த கேப்டன் தோனி

சிறந்த கேப்டன் தோனி

இதற்கு பதிலளித்த சல்மான் பட், டூப்ளசிஸ் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் நல்ல கேப்டன் கிடையாது. உலகக்கோப்பையின்போது, அவரின் வியூகம் அவ்வளவாக சரியில்லை. பந்து வீச்சாளர்களின் சொதப்பல், கேப்டன்களின் திட்டங்களை விமர்சனத்திற்கு உள்ளாக்கிறது. ஒரு சிறந்த வியூகம் அமைக்கும் கேப்டனுக்கு எடுத்துக்காட்டாக தோனியை சொல்லலாம். அதேபோல, ஐபிஎல்-ல் ரோகித் சர்மாவையும் சொல்லலாம்.

இயான் மோர்கன்

இயான் மோர்கன்

இயான் மோர்கன் குறித்து பேசிய பட், தற்போதைக்கு இயான் மோர்கன் ஒரு சிறந்த கேப்டனாக தோன்றவில்லை. ஏனென்றால், அவர் எப்போதுமே 300-350 ரன்களை விரட்டதான் தயாராகவுள்ளார். எதிரணியின் ஸ்கோரை கட்டுப்படுத்த அவர் போதிய திட்டங்களை வகுக்கவில்லை எனக் கூறினார்.

Story first published: Tuesday, June 1, 2021, 19:59 [IST]
Other articles published on Jun 1, 2021
English summary
Salman Butt says Dhoni is a great captain, Morgan isn't a good tactician
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X