For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆரம்பித்தது பகை.. கோலிக்காக தோள்கொடுத்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. வாகன் ஒப்பீடால் வந்த பிரச்னை!

கோலிக்கு எதிராக கருத்து தெரிவித்த மைக்கேல் வாகனுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

 மேட்சுக்கு '1' கோடி.. டபுள் 'வசூல்' - அதிர வைக்கும் 'அமீரகம்' ஐபிஎல் மேட்சுக்கு '1' கோடி.. டபுள் 'வசூல்' - அதிர வைக்கும் 'அமீரகம்' ஐபிஎல்

இதற்காக நியூசிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தபோது மைக்கேல் வாகன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

போட்டி

போட்டி

உலகின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸிமித், ஜோ ரூட் ஆகியோர் திகழ்கின்றனர். இவர்களில் யார் பெஸ்ட் என்ற போட்டி அவ்வபோது இணையத்தில் உலா வரும். அந்தவகையில் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா - நியூசிலாந்து மோதவுள்ளதால், கோலி - வில்லியம்சன் பேட்டிங் குறித்த சண்டைகள் நடந்து வருகிறது.

இந்தியர்களின் ஆதரவு

இந்தியர்களின் ஆதரவு

இது குறித்து சமீபத்தில் பேசிய பேசிய மைக்கேல் வாகன், விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் அதிகளவில் கிடைக்கும் ஆதரவால் தான் உலகின் சிறந்த வீரராக உள்ளார் எனத்தெரிவித்தார். கேன் வில்லியம்சனிடம் கோலியை போன்று 100 மில்லியன் ஃபாலோவர்கள் இல்லை, பல நூறு கோடிகளை சம்பாதிக்கவில்லை என்பதால் அவர் பெரியளவில் போற்றப்படவில்லை. இல்லை என்றால் அவரும் விராட் கோலிக்கு சமமானவர் தான் எனத்தெரிவித்திருந்தார். இது கோலி ரசிகர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் வீரர் ஆதரவு

பாகிஸ்தான் வீரர் ஆதரவு

இந்நிலையில் கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் களமிறங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் கோலி உள்ளதால் அவருக்கு ரசிகர்கள் அதிகம். ஆனால் அவரின் ஆட்டத்தால் தான் அவர் சிறந்த வீரர். சர்வதேச போட்டியில் இதுவரை கோலி 70 சதங்களை விளாசியுள்ளார். தற்போதைய கிரிக்கெட் காலத்தில் எந்த வீரரும் இதனை செய்ததில்லை. அப்படிபட்ட அற்புதமான வீரரை மற்றவர்களுடன் எப்படி ஒப்பிட முடியும் என எனக்கு தெரியவில்லை.

நீஙகள் எல்லாம் பேசலாமா?

நீஙகள் எல்லாம் பேசலாமா?

கோலி குறித்து யார் ஒப்பீடு செய்கிறார்கள் என்பது முக்கியம் இல்லையா? மைக்கேல் வாகன் இங்கிலாந்தின் சிறந்த கேப்டனாக இருக்கலாம். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவர் ஒரு சதம் கூட அடித்ததில்லை. தொடக்க வீரராக இருந்தபோதே அவரால் ஒரு சதம் கூட அடிக்காத போது, அவர் கோலி குறித்து பேசுவது தேவையற்ற ஒன்று. புதிதாக ஏதையாச்சும் கிளப்பிவிட வேண்டும் என்றால் பலருக்கும் அதிக நேரம் கிடைக்கும் போல என பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Sunday, May 16, 2021, 14:20 [IST]
Other articles published on May 16, 2021
English summary
Salman Butt Slams Vaughan for his Comparison of Kohli-Williamson
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X