For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே 'சுட்டிக் குழந்தை'யின் ரகளை பவுலிங்.. சரசரன்னு சரிந்த விக்கெட்டுகள்.. செம வெற்றி

லண்டன்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 'சுட்டிக் குழந்தை' என்றால் தெரியாதவர் எவரும் இருக்க முடியாது. யெஸ்.. நம்ம சாம் கர்ரன் தான். சும்மா விக்கெட்டுகளை அள்ளியிருக்காப்டி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த இரண்டு, மூன்று சீசன்களில் மிகச் சில இளம் டேலண்ட்டட் கிரிக்கெட் வீரர்களையே கண்டறிந்தது. அதில் முக்கியமானவர் சாம் கர்ரன்.

தமிழக வீரர் மீது பிசிசிஐ அதீத நம்பிக்கை.. 3வது முறையாக அடித்த அதிர்ஷ்டம்.. பயன்படுத்திக்கொள்வாரா? தமிழக வீரர் மீது பிசிசிஐ அதீத நம்பிக்கை.. 3வது முறையாக அடித்த அதிர்ஷ்டம்.. பயன்படுத்திக்கொள்வாரா?

ஆல் ரவுண்டர்.. லோ ஆர்டரில் பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்க விடுவதில் இப்போது டிகிரி படித்துக் கொண்டிருக்கிறார். விரைவில், பட்டம் பெற்று அப்படியே பி.ஹெச்.டியும் முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

சாம் கர்ரன்

சாம் கர்ரன்

சரி.. விஷயத்துக்கு வருவோம். இங்கிலாந்தில் இப்போது T20 Blast 2021 எனும் கிரிக்கெட் சீரிஸ் நடந்து கொண்டிருக்கிறது. இதில், நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் Middlesex, Surrey அணிகள் மோதின. சர்ரே அணியில் ஜேசன் ராய், சாம் கர்ரன், டாம் கர்ரன் ஆகிய இந்திய ரசிகர்களுக்கு பரிச்சயமான வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது.

7 பவுலர்ஸ்

7 பவுலர்ஸ்

வில் ஜேக்ஸ் எனும் ஓப்பனர், 24 பந்துகளில் 70 ரன்களை பறக்கவிட்டார். இதில் 9 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். ஜேசன் ராய் 45 ரன்களும், சாம் கர்ரன் 17 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர். மிடில்செக்ஸ் அணி தனது 7 பவுலர்களை பந்து வீச பயன்படுத்தியது. (நல்ல வேளை..அம்பயரை பவுல் செய்ய கூப்பிடல)

முடங்கிய மோர்கன் அணி

முடங்கிய மோர்கன் அணி

பிறகு, இயன் மோர்கன் தலைமையிலான மிடில்செக்ஸ் அணி, 20 ஓவர்களில் 169 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. ஒருக்கட்டத்தில், 11 ஓவர்களில் 109 - 1 என்று மிக வலிமையான நிலையில் அந்த அணி இருந்தது. ஆனால், அதன் பிறகு நம்ம சாம் கர்ரன் பந்து வீச, மிடில் ஆர்டர் டூ லோ ஆர்டர் முற்றிலும் குலைந்து போனது. 4 ஓவர்கள் பந்து வீசி, 29 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதவாது, மிடில் ஆர்டர் மற்றும் லோ ஆர்டர் பேட்ஸ்மேன்களை அனைவரையும் காலி செய்து, கடைசி 9 ஓவர்களில் அந்த அணியை வெறும் 50 ரன்களில் முடக்கிவிட்டார்.

செம ஃபார்மில் சாம்

செம ஃபார்மில் சாம்

ஐபிஎல் 2021 தொடரில், சிறப்பாக விளையாடிய சாம் கர்ரன், இப்போது தனது அபார ஃபார்மை அப்படியே கடத்தி வருகிறார். ஆனால், செப்டம்பர் மாதம் அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில், இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று அந்நாட்டின் வாரியம் கூறிவிட்டதால், சாம் கர்ரனின் டெரிஃபிக் ஆட்டத்தை நிச்சயம் தோனி தவறவிடுவார்.

Story first published: Friday, June 11, 2021, 20:58 [IST]
Other articles published on Jun 11, 2021
English summary
sam curran 4 wickets Surrey T20 Blast 2021 - சாம் கர்ரன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X