For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சனத் ஜெயசூர்யா மீது குற்றம் சுமத்திய ஐசிசி.. வேறு திசையில் செல்லும் பிக்ஸிங் விவகாரம்

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முன்னாள் இலங்கை அணி வீரர் சனத் ஜெயசூர்யா மீது குற்றம் சுமத்தி உள்ளது.

மேட்ச் பிக்ஸிங் பற்றிய விசாரணைகளுக்கு இலங்கை தேர்வுக் குழு தலைவராக இருந்த ஜெயசூர்யா சரியாக ஒத்துழைக்கவில்லை என குற்றம் சுமத்தி உள்ளது.

இந்த குற்றசாட்டுகளுக்கு பதில் அளிக்க இரண்டு வார காலம் அவகாசம் அளித்துள்ளது ஐசிசி.

அல்-ஜசீரா ஆவணப்படம்

அல்-ஜசீரா ஆவணப்படம்

அல்-ஜசீரா தொலைக்காட்சியானது இந்த ஆண்டு துவக்கத்தில் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. அந்த ஆவணப் படத்தில் இந்தியாவுக்கு எதிராக ஜூலை 2017இல் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2016 ஆகஸ்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் பிக்ஸிங் செய்ய முற்பட்டதை விவரிக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது.

ஒத்துழைப்பு வழங்கவில்லை

ஒத்துழைப்பு வழங்கவில்லை

இந்த டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற காலத்தில் பதவியில் இருந்த இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினருக்கு சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறி ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சனத் ஜெயசூர்யா சிக்குகிறார்

சனத் ஜெயசூர்யா சிக்குகிறார்

இந்த டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற காலத்தில் தேர்வுக் குழு தலைவராக இருந்தவர் சனத் ஜெயசூர்யா. அவருக்கும் சேர்த்து தான் இப்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயசூர்யா குறித்து சமீப காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகின்றன. அதில் இதுவும் இணைந்துள்ளது.

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு

ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆர்டிகிள் 2.4.6 மற்றும் 2.4.7 ஆகிய பிரிவுகளின் கீழ் முன்னாள் தேர்வுக் குழுவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பது, விசாரணையை தடுக்க முயல்வது போன்ற குற்றங்களை குறிப்பிடுகிறது. மேட்ச் பிக்ஸிங் குறித்த விசாரணை தேர்வாளர்கள் மீதே பாய்ந்துள்ளது.

Story first published: Monday, October 15, 2018, 18:26 [IST]
Other articles published on Oct 15, 2018
English summary
Sanath Jayasuriya charged under corruption by ICC for not co-operating with ACU
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X