For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முட்டாப்பசங்க… இந்தியாவுடன் தோத்துட்டா, நாங்க சாப்பிடக்கூடாதா? பொங்கிய சானியா மிர்சா.. இது சரியா?

Recommended Video

WORLD CUP 2019: INDIA VS PAK | பாகிஸ்தான் ரசிகர் விமர்சனம் ,பொங்கிய சானியா மிர்சா

லண்டன்: இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி கண்டதற்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தான் காரணம் என பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான முக்கிய போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, நட்சத்திர வீரரும், பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவருமான சோயப் மாலிக், முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அதை கண்ட பாகிஸ்தான் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

Sania mirza condemns pakistan fans regarding defeat against india

இதற்கு எல்லாம் முக்கிய காரணம்... போட்டிக்கு முதல் நாள் இரவு பாகிஸ்தான் வீரர்கள் சிலருடன் சானியா மிர்சா லண்டனில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் உணவருந்த சென்றுள்ளனர். அங்கு பாக்கிஸ்தான் அணி வீரர்கள் போதை வஸ்துகளை பயன் படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்வை அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது.


இந்நிலையில் இந்தியாவிடம், பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில் இந்த வீடியோவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர்கள் வீரர்கள் மற்றும் சானியா மர்சாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

போட்டிக்கு முதல் நாள் இரவு ஓய்வெடுக்காமல் விருந்தில் பங்கேற்றால், அசதி காரணமாக அடுத்த நாள் சிறப்பாக ஆட முடியாது என்று முன்பே உங்களுக்கு தெரியாதா? சோயப் மாலிக் டக் அவுட் ஆக நீங்கள் தான் காரணம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், தமது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.


அதற்கு ட்விட்டரில் சானியா மிர்சா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஓட்டலில் நாங்கள் உணவருந்தும் காட்சியை, எங்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்து வெளியிட்ட முட்டாள்களே...!! ஓட்டலுக்கு சென்று, குடும்பத்துடன் உணவருந்த கூட உரிமை இல்லையா? மேட்சில் தோற்றால், சாப்பிடக்கூடாதா என்ன? என்று பதில் அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Story first published: Tuesday, June 18, 2019, 14:25 [IST]
Other articles published on Jun 18, 2019
English summary
Sania mirza condemns Pakistan fans regarding defeat against India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X