For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லியாண்டர் பயஸ் ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்குள் கால் வைத்த சானியா மிர்சா ஜோடி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் கால் இறுதி போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி, நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.

சானியா-டோடிக் ஜோடிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. அவர்களது முதல் சர்வீசை முறியடித்து ஹிங்கிஸ்-பயஸ் ஜோடி 3-1 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றது.

உடனடியாக பதிலடி கொடுத்த சானியா கூட்டணி, எதிராளியின் சர்வீசை பிரேக் செய்ததுடன் 6-6 என்று சமனுக்கு கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட டைபிரேக்கரில் பட்டையை கிளப்பிய சானியா இணை முதலாவது செட்டை வசப்படுத்தியது.

வெற்றி பெற்ற சானியா ஜோடி

வெற்றி பெற்ற சானியா ஜோடி

இரண்டாவது செட்டில் ஹிங்கிஸ்- பயஸ் ஜோடியின் சர்வீசை ஆரம்பத்திலேயே தகர்த்த சானியா-டோடிக் ஜோடி அதன் பிறகு தங்களது பிடி தளராமல் கடைசி வரை பார்த்துக் கொண்டதுடன், வெற்றிக்கனியையும் பறித்தது.

அரை இறுதிக்கு தகுதி

அரை இறுதிக்கு தகுதி

73 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சானியா-டோடிக் கூட்டணி 7-6 (7-1), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

இன்று நடைபெறும் ஆட்டம்

இன்று நடைபெறும் ஆட்டம்

சானியா மிர்சா, பெண்கள் இரட்டையரில் மார்ட்டினா ஹிங்கிசுடன் கைகோர்த்து அட்டகாசப்படுத்தி வருகிறார். அவரும், ஹிங்கிசும் இன்று நடக்கும் இறுதிசுற்றில் செக்குடியரசின் ஆன்ட்ரியா ஹவக்கோவா- லூசி ஹடெக்கா இணையுடன் மோதுகிறார்கள். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

சோனியில் பார்க்கலாம்

சோனியில் பார்க்கலாம்

இந்த ஆட்டம் முடிந்ததும் இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு கலப்பு இரட்டையர் அரை இறுதியில் சானியா-டோடிக் ஜோடி, எலினா வெஸ்னினா (ரஷ்யா)-புருனோ சோரஸ் (பிரேசில்) இணையை சந்திக்கிறது. இதனை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 29, 2016, 10:46 [IST]
Other articles published on Jan 29, 2016
English summary
India’s tennis star Sania Mirza and her Croatian partner Ivan Dodig entered the mixed doubles semifinals at the Australian Open after posting straight-set win over defending champions Leander Paes and Martina Hingis, in Melbourne on Thursday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X