சுஷாந்த்.. நாம 2 பேரும் ஒருநாள் டென்னிஸ் ஆடலாம் என்றாயே.. சானியா மிர்சா உருக்கமான பதிவு

ஹைதராபாத் : நாம் சேர்ந்து டென்னிஸ் ஆடலாம் என்று கூறினாயே.. என தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார் சானியா மிர்சா.

Sushant Singh இறுதி சடங்கில் கண்கலங்கிய பாலிவுட் பிரபலங்கள்

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் பாலிவுட் மற்றும் கிரிக்கெட் அரங்கில் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் அவரது மறைவால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்.

சுஷாந்த் சிங் மரணம்.. நம்ப முடியாமல் வாயடைத்துப் போன தோனி.. வெளியான தகவல்

பலத்த அதிர்ச்சி

பலத்த அதிர்ச்சி

சுஷாந்த் சிங் ராஜ்புத் தொலைக்காட்சியில் நடித்து பின் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். எம்.எஸ்.தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி திரைப்படம் மூலம் தோனியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். இளம் வயதில் அவரது மரணம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மும்பையில் தன் வீட்டில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவருக்கு என்ன மன அழுத்தம் இருந்தது என விசாரணை நடந்து வருகிறது. அவரது முன்னாள் மேனேஜர் சில நாட்கள் முன்பு தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

சானியா மிர்சா

சானியா மிர்சா

இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா, சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்து ட்விட்டரில் உருக்கமான இரங்கல் பதிவை பகிர்ந்துள்ளார். தன்னுடன் டென்னிஸ் ஆட விரும்பியதையும் அவர் கூறி உள்ளார்.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

"சுஷாந்த்.. ஒருநாள் நாம் சேர்ந்து டென்னிஸ் ஆடுவோம் என்றாயே.. நீ முழுவதும் வாழ்வு மற்றும் சிரிப்பை கொண்டவன்.. நீ எங்கே போனாலும் சிரிப்பை பகிர்வாய்.. நீ இந்த அளவு காயம் அடைந்து இருப்பாய் என எங்களுக்கு தெரியாது. இந்த உலகம் உன்னை இழந்து தவிக்கும். இதை எழுதும் போதே நடுக்கமாக உள்ளது. அமைதியாக உறங்கு என் நண்பரே" என சானியா பதிவிட்டுள்ளார்.

எப்போதும் புன்னகை

எப்போதும் புன்னகை

சுஷாந்த் சிங் எப்போதும் புன்னகையுடன் இருப்பவர் என அவருடன் பழகிய அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். தோனியாக திரைபடத்தில் நடிக்க அவர் 18 மாதங்கள் எடுத்துக் கொண்டு தோனியின் நட்பு வட்டத்துடன் நெருங்கி பழகி உள்ளார். தோனியும், அவர்களும் சுஷாந்த் சிங்கின் மரணத்தை கேட்டு அதிர்ச்சியில் உள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sania Mirza mourns with a heartfelt tweet on Sushant Singh Rajput
Story first published: Monday, June 15, 2020, 20:18 [IST]
Other articles published on Jun 15, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X