For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித்திற்கு பெரிய சம்பவம் இருக்கு.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் பயிற்சியாளர் சுவாரஸ்ய தகவல்!

மும்பை: ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இந்திய அணியை விட கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மிக முக்கியமானது என முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.

இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் நாக்பூரில் தொடங்குகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நியூசிலாந்து தொடரின் போது ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷமி, அஸ்வின் உள்ளிட்டோர் மீண்டும் அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளனர். இதில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்க்க தான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

“பயந்ததை போலவே நடக்குதே”.. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. பிசிசிஐ எடுத்த அட்டகாச முடிவு! “பயந்ததை போலவே நடக்குதே”.. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. பிசிசிஐ எடுத்த அட்டகாச முடிவு!

ரோகித்தின் நிலை

ரோகித்தின் நிலை

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விராட் கோலியிடம் இருந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரோகித் சர்மா இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதிலும் 2 போட்டிகளில் மட்டுமே இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். கடந்த வருடம் பிப்ரவரியில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்தினார்.

என்ன ஆனது?

என்ன ஆனது?

காயத்தின் காரணமாக இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து முதலில் விலகினார். 2021ம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட கடைசி போட்டி தான் இது. இதே போல வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் அவரால் விளையாட முடியவில்லை. 35 வயதாகும் ரோகித்திற்கு தற்போது தான், இந்தியாவை 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வழிநடத்தும் வாய்ப்பே கிடைத்துள்ளது.

சஞ்சய் பங்கர் கருத்து

சஞ்சய் பங்கர் கருத்து

இந்நிலையில் இதுகுறித்து சஞ்சய் பங்கர் பேசியுள்ளார். அதில், ரோகித் சர்மாவுக்கு இது மிகப்பெரிய தொடராக இருக்கும். ஏனென்றால் எப்போதெல்லாம் அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறாரோ, துரதிஷ்டவசமாக நிறைய போட்டிகளை தவறவிட்டார். 2018ம் ஆண்டு ரோகித் அதீத ஃபார்மில் இருந்தார். ஆனால் அவசர காரணமாக டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டார்.

சம்பவம் உள்ளது

சம்பவம் உள்ளது

2021ல் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ரன் குவித்தவர் ரோகித் தான். இங்கிலாந்து களத்தில், அவர்களின் பவுலர்களையே அசால்டாக சமாளித்த அவர், அதே போன்ற தரமான ஃபார்மை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் பயன்படுத்த வேண்டும். இந்த முறை ஸ்பின்னர்களுக்கு சாதகமாக சொந்த மண்ணில் ஆடுவதால் பெரிய அடிதளத்தை அமைத்துக் கொடுப்பார் என நம்புவதாக சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.

Story first published: Saturday, February 4, 2023, 15:40 [IST]
Other articles published on Feb 4, 2023
English summary
Ex Indian coach Sanjay bangar feels Rohit sharma to have a massive series of India vs Australia, here is the reason why?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X