For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மத்தவங்க ஓகே..! இவரு வேண்டாம்..! இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்படும் அந்த பயிற்சியாளர்..?

மும்பை: இந்திய அணியின் மற்ற பயிற்சியாளர்களை நியமிக்கும் விவகாரத்தில் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கழற்றி விடப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி கடந்த வாரம் மீண்டும் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தலைமையில் கூட்டம் கூடியது.

அந்த கூட்டத்தில், இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் பதவிகளுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. இதில், பயிற்சியாளர் பாரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் மீண்டும் தங்கள் பதவியில் தக்க வைப்பார்கள் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

போராடும் சூழல

போராடும் சூழல

ஆனால், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தனது பதவியை தக்க வைக்க கடுமையாக போராடும் சூழலில் இருப்பதாக தெரிகிறது. முன்னாள் இந்திய டெஸ்ட் ஓப்பனர் விக்ரம் ரத்தோர் இதே பதவிக்கு விண்ணப்பத்திருக்கும் நிலையில், சஞ்சய்க்கு இவர் கடும் போட்டியாளராக விளங்குகிறார்.

நேர்காணல் எப்போது?

நேர்காணல் எப்போது?

மற்ற பயிற்சியாளர்களுக்கான நேர்காணல் முடிந்துவிட்டது. பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கர் இந்திய அணியுடன் ஆன்டிகுவாவில் இருப்பதால் அவர் இன்னும் நேர் காணலில் பங்கேற்கவில்லை. அவர் எப்போது பங்கேற்பார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தோனியை இறக்கியது யார்?

தோனியை இறக்கியது யார்?

அவரது நேர்காணல் முடிந்த பிறகே, இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது. அவருக்கு முன்னாள் இந்திய டெஸ்ட் ஓப்பனர் விக்ரம் ரத்தோர் கடும் போட்டியாளராக இருக்கிறார். ஏன் என்றால் உலக கோப்பையில் தோனியை 7வது வரிசையில் களம் இறக்கிய விவகாரத்தில் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் சஞ்சய் பங்கர்.

சர்ச்சையானது

சர்ச்சையானது

அவரை யார் 7வது வரிசையில் இறக்கியது என்ற கேள்விகள் எழுந்த போது, அது நான் தான் என்றும், ஆனால் அதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல என்றும் கூறியவர். அவரது அந்த பதில் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மற்ற பயிற்சியாளர்கள் யார்?

மற்ற பயிற்சியாளர்கள் யார்?

ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், 2021 டி20 உலக கோப்பை தொடர் வரை நீட்டிக்கப் பட்டிருக்கிறது. அவருடன் இனி யார், யார் கை கோர்ப்பார்கள் என்பது விரைவில் அறிவிக்க இருக்கிறது பிசிசிஐ. எது எப்படி இருந்தாலும், ரவி சாஸ்திரி, கோலி ஆதரவு பெற்றவர்களே மற்ற பயிற்சியாளர்களாக வர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Story first published: Tuesday, August 20, 2019, 12:02 [IST]
Other articles published on Aug 20, 2019
English summary
Sanjay bangar may be dismissed from batting coach, sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X