அவருக்கு தன்னம்பிக்கை இல்லை....சௌகர்யமாக உணரவில்லை.. ரஹானே மோசமான ஆட்டம்... முன்னாள் வீரர் விளாசல்

அகமதாபாத்: இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் ரஹானேவுக்கு தன்னம்பிக்கையே இல்லை என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 27 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தன்னம்பிக்கை இன்றி ஆடி வருவதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ரஹானே ஆட்டம்

ரஹானே ஆட்டம்

ஆஸ்திரேலிய தொடர் முதல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை இந்திய அணி துணை கேப்டன் பெரியளவில் சோபிக்க தவறவிட்டார். இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 45 பந்துகளை சந்தித்து 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பிரச்னை

பிரச்னை

இது குறித்து பேசிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சமீப நாட்களில் ரஹானேவின் ஆட்டம் அவர் சாதாரணமாக உள்ளதாக தெரியவில்லை. அவர் அணிக்கும், ரசிகர்களுக்கும் தேவைப்படும் நம்பிக்கையை கொடுக்க முடியவில்லை. அதுதான் அவரிடம் உள்ள பெரிய பிரச்னை என தெரிவித்துள்ளார்.

 தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

சமீப காலங்களில் ரஹானே ஆட்டத்தில் தன்னம்பிக்கை குறைவாக வைத்துள்ளா என தோன்றுகிறது. அவர் மிகவும் பாதுகாப்பற்ற சூழலை உணர்வதாக தெரிகிறார். கடந்த சில நேரங்களில் அவரின் ஷாட்கள் நமக்கும் திருப்திகரமானதாக உள்ளதுதான். எனினும் அது அவர் நம்பிக்கையாக விளையாடுவதாக காட்டவில்லை என தெரிவித்துள்ளார்.

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

இதுவரை 72 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள ரஹானே 4556 ரன்களை எடுத்துள்ளார். வெளிநாட்டு மைதானங்களில் இதுவரை 42 டெஸ்ட் போட்டிகளில் 75 இன்னிங்ஸ் விளையாடி 2,978 ரன்கள் சேர்த்துள்ளார். அதில் இவரது சராசரி 44.44 ஆகும். 15 அரைசதங்களும் 8 சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 147 ரன்கள் அடித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sanjay Manjrekar not happy with Rahane's Performance
Story first published: Saturday, March 6, 2021, 12:17 [IST]
Other articles published on Mar 6, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X