For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தாம் யார் என்று சொல்லி அடித்த ஜடேஜா... மன்னிப்பு கேட்ட உளறல் வாய் மஞ்சரேக்கர்..!!

Recommended Video

கிண்டல் செய்தவர்களுக்கு அதிரடியில் மூலம் பதில் கூறிய ஜடேஜா

மான்செஸ்டர்: ஆல் ரவுண்டர் ஜடேஜாவை விமர்சித்ததற்கு வர்ணனையாளரும், முன்னாள் வீரருமான சஞ்சய் மஞ்சரேக்கர் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

நடப்பு உலக கோப்பை போட்டியில், எல்லா விஷயத்தையும் ஓரம்கட்டிவிட்டு, ஒரு வைரல் ஆனது. அதுதான் மஞ்சரேக்கருக்கும், ஜடேஜாவுக்கும் நடந்த வார்த்தை போர்.. வர்ணனை போர் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஜடேஜா ஒரு நாள் போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று மஞ்ரேக்கர் கூறினார். அவரின் கருத்துக்கு பதிலளித்த ஜடேஜா 'பிதற்றும் வார்த்தைளை பேச வேண்டாம்' என்று கடுமையாக கூறியிருந்தார்.

உள்ளே சென்று கலங்கிய கோலி.. வெளியே வந்து கத்திய ரோஹித்.. ஆர்ப்பரித்து பொங்கிய மொத்த மைதானம்! உள்ளே சென்று கலங்கிய கோலி.. வெளியே வந்து கத்திய ரோஹித்.. ஆர்ப்பரித்து பொங்கிய மொத்த மைதானம்!

சர்ச்சையான விவகாரம்

சர்ச்சையான விவகாரம்

மஞ்சரேக்கர், தோனி முதல் ஜடேஜாவை கிண்டல் செய்தது, சீண்டியது பெரிய விவகாரமானது. பல கண்டங்கள் தெரிவித்த ரசிகர்கள், மஞ்சரேக்கரை டுவிட்டரில் தாளித்து எடுத்துவிட்டனர்.

பாராட்டிய மஞ்சரேக்கர்

இதனிடையே நேற்றைய அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியை தழுவி, உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இந் நிலையில், அரையிறுதி போட்டியில் ஜடேஜா சிறப்பாக விளையாடியதாக மஞ்ரேக்கர் பாராட்டியிருக்கிறார்.

சிறப்பான பங்களிப்பு

சிறப்பான பங்களிப்பு

அவரை பற்றி தாம் விமர்சித்ததற்கு மன்னிப்பையும், வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார். போட்டிக்கு பின்னர், அவர் கூறியிருப்பதாவது: ஜடேஜா தனது சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். அனைவரின் முன்னிலையில் ஒரு அற்புதமான ஆட்டத்தை அவர் விளையாடி இருக்கிறார். அவரது திறமையால் அனைவரையும் கிழித்து எறிந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்.

அற்புத ஆட்டம்

அற்புத ஆட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஜடேஜா சிறப்பாக விளையாடி இருக்கிறார். பவுலிங்கில் எகானமி பந்து வீச்சாளர் (1/34), பீல்டராக 2 கேட்ச் பிடித்து ஒரு ரன் ரவுட்டும் செய்திருக்கிறார். இந்திய அணிக்காக முதல் சிக்சர் இவர் விளாசியது தான். உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நாக் அவுட் போட்டிகளில், 8வது வீரராக களமிறங்கி அரைசதம் அடித்த வீரர் என்ற வரலாறு படைத்திருக்கிறார் ஜடேஜா.

Story first published: Thursday, July 11, 2019, 12:45 [IST]
Other articles published on Jul 11, 2019
English summary
Sanjay Manjrekar says apology to ravindra jadeja.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X