For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புது பசங்கள மிடில் ஆர்டர்ல போட்டுருக்கீங்களே... வெற்றிக்கு இது சரியானதா? மஞ்ச்ரேகர் கேள்வி

சென்னை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது

எளிதாக சேஸ் செய்திருக்க வேண்டிய 151 ரன்களை அடிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பரிதாபமாக தோல்வியுற்றது.

இனிமே நானும் பேர்ஸ்டோவும்தான் சிறப்பா ஆடணும் போல இருக்கு... வேற வழி இல்ல... வார்னர் ஆதங்கம் இனிமே நானும் பேர்ஸ்டோவும்தான் சிறப்பா ஆடணும் போல இருக்கு... வேற வழி இல்ல... வார்னர் ஆதங்கம்

இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் இந்த தோல்விக்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய டிவி வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகர் விளக்கம் அளித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் தோல்வி

சன்ரைசர்ஸ் தோல்வி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. அந்த அணியின் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்த போதிலும் எளிதான சேஸ் செய்திருக்க வேண்டிய ஸ்கோரை சன்ரைசர்ஸ் தவறவிட்டது.

வார்னர், பேர்ஸ்டோ சிறப்பு

வார்னர், பேர்ஸ்டோ சிறப்பு

முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 151 ரன்கள் இலக்கை சன்ரைசர்ஸ் அணிக்கு அளித்திருந்தது. இதையடுத்து கடந்த இரு போட்டிகளில் தொடர் தோல்வியை கண்ட சன்ரைசர்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெறும் நம்பிக்கையுடன் களமறங்கியது. அணியின் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவும் நம்பிக்கை அளித்தனர்.

ஏமாற்றம் அளித்த புதிய வீரர்கள்

ஏமாற்றம் அளித்த புதிய வீரர்கள்

ஆயினும் அவர்களுக்கு பிறகு மிடில் ஆர்டரில் களமிறங்கிய புதிய வீரர்கள் அபிஷேக் சர்மா, விராட் சிங் மற்றும் அப்துல் சமத் ஆகியோர் ஏமாற்றத்தை அளித்தனர். கடந்த ஆர்சிபிக்கு எதிராக இதே ஆர்டரில் களமிறங்கி தோல்வியுற்ற சன்ரைசர்ஸ் அதை மாற்றாமல் மீண்டும் விளையாடி தோல்வியடைந்துள்ளது.

வெற்றிக்கு போதுமானதல்ல

இந்நிலையில் புதிய வீரர்களான அபிஷேக் சர்மா, விராட் சிங் மற்றும் அப்துல் சமத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மிடில் ஆர்டரில் இறக்கியது அணியின் வெற்றிக்கு போதுமானது இல்லை என்று முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய டிவி வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

வார்னர் அதிருப்தி

வார்னர் அதிருப்தி

முன்னதாக அணியின் பேட்டிங் குறித்து டேவிட் வார்னரும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இருவர் மட்டுமே சிறப்பான துவக்கத்தை அளித்து மற்றவர்கள் ஆழமான பேட்டிங்கை அளிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக அவர் குறிபிபட்டுள்ளார். இது அணியின் வெற்றிக்கு போதுமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, April 18, 2021, 12:25 [IST]
Other articles published on Apr 18, 2021
English summary
Anyone that picks Abhishek Sharma, Virat Singh and Abdul Samad all together in one playing XI does not deserve to win -Manjrekar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X