For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது 7 சிக்ஸ் அடிச்சாரா? இவரை உடனே டீம்ல எடுங்க.. ரிஷப் பண்ட்டுக்கு ஆப்பு வைக்க வரும் சேட்டன்

மும்பை : இந்திய அணியில் அடுத்த நிரந்தர விக்கெட் கீப்பராக இருப்பார் என பில்டப் கொடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சரியாக ரன் குவிக்கவில்லை.

அதே சமயம், தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணியில் இடம் பெற்று ஆடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி தேர்வாளர்களை ஈர்த்துள்ளார்.

கொஞ்சம், கொஞ்சமாக தோனியாக மாறும் இளம் அதிரடி வீரர்.. வெளியான பயிற்சி வீடியோ..!!கொஞ்சம், கொஞ்சமாக தோனியாக மாறும் இளம் அதிரடி வீரர்.. வெளியான பயிற்சி வீடியோ..!!

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

தான் ஆடிய இரண்டு போட்டிகளில், முதல் போட்டியில் 1 ரன் எடுத்து ஏமாற்றினாலும், இரண்டாம் போட்டியில் மிரட்டினார் சஞ்சு சாம்சன். 48 பந்துகளில் 91 ரன்கள் அடித்து துவம்சம் செய்து இருந்தார்.

7 சிக்ஸர்கள் அடித்தார்

7 சிக்ஸர்கள் அடித்தார்

20 ஓவர் போட்டியாக நடந்த அந்த போட்டியில் 7 சிக்ஸர்கள், 6 ஃபோர் என அடித்து அசத்தினார். இவரது இந்த அதிரடி பேட்டிங், ரிஷப் பண்ட் மீது என்ன எதிர்ப்பார்ப்பு இருக்கிறதோ, அதை பூர்த்தி செய்வதாக உள்ளது. அதிரடியாக ஏழு சிக்ஸ் அடித்தது எளிதாக அவரை அடையாளம் காட்டி உள்ளது.

ரிஷப் பண்ட் சொதப்பல்

ரிஷப் பண்ட் சொதப்பல்

ரிஷப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மிகவும் மோசமாக சொதப்பினார். அதனால் அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில், சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெ.இண்டீஸ் தொடரில் பண்ட்

வெ.இண்டீஸ் தொடரில் பண்ட்

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஒரே ஒரு அரைசதம் அடித்தார் பண்ட். அது மட்டுமே அந்த சுற்றுப் பயணத்தில் அவரின் அதிக பட்ச ரன்கள். ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் மோசமாக சொதப்பினார்.

எத்தனை ரன்கள்?

எத்தனை ரன்கள்?

மூன்று வித கிரிக்கெட் தொடர்களையும் சேர்த்தே 199 ரன்கள் தான் எடுத்தார். டெஸ்ட் தொடரில் மூன்று இன்னிங்க்ஸ்களில் 58 ரன்கள், ஒருநாள் தொடரில் இரண்டு இன்னிங்க்ஸ்களில் 20 ரன்கள், டி20 தொடரில் 3 இன்னிங்க்ஸ்களில் 69 ரன்கள் எடுத்தார் பண்ட்.

தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு

தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு

இதை அடுத்து, தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரிஷப் பண்ட்டுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்குமா இந்திய அணி நிர்வாகம்?

Story first published: Saturday, September 7, 2019, 20:25 [IST]
Other articles published on Sep 7, 2019
English summary
Sanju Samson hit 7 sixes in India A match and may replace Rishabh Pant with his stunning performance.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X