டாசின்போது ராஜஸ்தான் கேப்டன் செய்த செயல்... ஷாக்கான அம்பயர்... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

Tossed Coin-ஐ பாக்கெட்டில் போட்டுக்கொண்ட Sanju Samson | Oneindia Tamil

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் சிஎஸ்கே பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் செய்த செயல் அம்பயரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுதான் "டாஸ்க்".. முதல் பாலில் இருந்து ஒரே விஷயத்திற்கு குறி வைத்த சிஎஸ்கே.. களத்தில் என்ன நடந்தது?

12வது போட்டி

12வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 12வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சிஎஸ்கே தனது பேட்டிங்கை துவக்கி ஆடி வருகிறது.

4வது இடத்தில் சிஎஸ்கே

4வது இடத்தில் சிஎஸ்கே

கடந்த இரு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே அணி. முதலில் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடி சொதப்பினாலும் அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடி சிறப்பான வெற்றியை சிஎஸ்கே பெற்று ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

தீவிரத்தை வெளிப்படுத்தும் சிஎஸ்கே

தீவிரத்தை வெளிப்படுத்தும் சிஎஸ்கே

இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தனது சிறப்பான பயணத்தை தொடர வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. கடந்த சீசனில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே, இந்த தொடரை தீவிரமாக எதிர்கொண்டு வருகிறது. கடந்த இரு போட்டிகளிலும் சிஎஸ்கேவின் தீவிரம் சிறப்பாக வெளிப்பட்டது.

காயினை பேக்கட்டில் போட்ட கேப்டன்

இந்நிலையில் இன்றைய போட்டியில் தோனிக்கு எதிராக டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன் டாஸ் போட பயன்படுத்திய நாணயத்தை எடுத்து தனது பேக்கட்டில் போட்டுக் கொண்டார். அவரது இந்த செயல் டாஸ் போட்ட அம்பயரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதே செயலை செய்த சாம்சன்

இதே செயலை செய்த சாம்சன்

கடந்த 12ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மோதிய போட்டியில் தனது முதல் டாஸ் வின் செய்திருந்தார் சஞ்சு சாம்சன். அந்த போட்டியிலும் அவர் டாஸ் போட பயன்படுத்திய காயினை எடுத்து தனது பேக்கட்டில் போட்டுக் கொண்டார். அது அவரது முதல் டாஸ் வெற்றி என்று அப்போது தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியிலும் அவர் அதே செயலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sanju Samson behaves life, If I win the toss, I will take the coin
Story first published: Monday, April 19, 2021, 21:14 [IST]
Other articles published on Apr 19, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X