For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்படியே தோனியின் சாயல்.. முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சம்பவம்.. பிசிசிஐ-க்கு தரமான பதிலடி

லக்னோ: பிசிசிஐ தேர்வுக்கு அதிகாரிகளுக்கு சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை தரமான பதிலடியை கொடுத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 40 ஓவர்களில் ( மழையால் குறைப்பு ) 249/4 ரன்களை அடிக்க, இந்திய அணி 240/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

 சஞ்சு சாம்சனின் பேட்டிங்

சஞ்சு சாம்சனின் பேட்டிங்

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது. இதற்கு காரணம் சஞ்சு சாம்சனின் ஆட்டம் தான். கடின இலக்கை துரத்திய இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது வந்த சஞ்சு சாம்சன், பொறுப்புடன் இந்திய அணியை கடைசி வரை அழைத்துச் சென்றார்.

தோனியின் சாயல்

தோனியின் சாயல்

ஒருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர் அதிரடி காட்ட, மறுமுணையில் சஞ்சு சாம்சன் தூண் போல நிலைத்து நின்றார். இதனால் கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற சூழலில் கூட தோனியை போல சகஜமாக நின்று பவுண்டரிகளை பறக்கவிட்டார். எனினும் 9 ரன்கள் பற்றாக்குறையாக சென்றது. கடைசி வரை நின்ற சாம்சன் 63 பந்துகளில் 86 ரன்களை விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 2வது அரைசதமாகும்.

பிசிசிஐ-க்கு பதிலடி

பிசிசிஐ-க்கு பதிலடி

இந்த ஆட்டத்தின் மூலம் பிசிசிஐ தேர்வு குழுவுக்கு மீண்டும் நெருக்கடி உருவாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் சாம்சன் ஒதுக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கு நியூசிலாந்து ஏ அணியுடனான தொடரில் பதிலடி கொடுத்திருந்த சஞ்சு சாம்சன், தற்போது தென்னாப்பிரிக்காவுடனும் அசத்தியுள்ளார். இதனால் இனி வரும் தொடர்களில் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்தே தீர வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது,

அடுத்த தொடர்

அடுத்த தொடர்

இந்திய அணி அடுத்ததாக டி20 உலகக்கோப்பையில் களமிறங்குகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்து அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. எனவே இந்திய அணியின் முக்கிய தொடர்கள் அனைத்திலும் சஞ்சு சாம்சனுக்கு இடம் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, October 7, 2022, 7:33 [IST]
Other articles published on Oct 7, 2022
English summary
Sanju samson's fifty against south africa in 1st ODI puts pressure on BCCI Selectors
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X