என்னா அடி.. 16 சிக்ஸ்.. இவரை டீம்ல சேருங்க.. ரிஷப் பண்ட்டை கழட்டி விடுங்க.. அடம்பிடிக்கும் ரசிகர்கள்

ஷார்ஜா : இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போதே துவங்கி விட்டது.

Sanju Samson's power packed performance vs Chennai | OneIndia Tamil

2020 ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார்.

ஆனால், அந்த இரண்டு போட்டிகளிலேயே எதிரணிகளை துவம்சம் செய்து, இந்த சீசனின் உச்ச நட்சத்திரமாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளார்.

தோனியால் மொத்த சிஎஸ்கே டீமுக்கும் பிரஷர்.. முன்னாள் ஆஸி. வீரர் சொன்ன உண்மை!

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடந்த இரண்டு போட்டிகளிலும் அந்த அணி 200 ரன்களை அனாயசமாக கடந்து வெற்றிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்சன் அதிரடி

சாம்சன் அதிரடி

அந்த இரண்டு போட்டிகளிலும் ராஜஸ்தான் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் உடன் கை கொடுத்தவர் சஞ்சு சாம்சன். முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிக்ஸ் மழை பொழிந்து 74 ரன்கள் குவித்த அவர், பஞ்சாப் அணிக்கு எதிராக சேஸிங்கில் 85 ரன்கள் குவித்தார்

16 சிக்ஸ்

16 சிக்ஸ்

இரண்டு போட்டிகளில் 16 சிக்ஸ் அடித்து மிரள வைத்துள்ளார். ஷார்ஜா மைதானம் சிக்ஸ் அடிக்க எளிதான மைதானம் என்றாலும் மற்ற எந்த பேட்ஸ்மேனையும் விட சஞ்சு சாம்சன் அதிக சிக்ஸர்கள் அடித்தார். அவரது அதிரடியால் 224 ரன்கள் என்ற எட்ட முடியாத பெரிய இலக்கை கூட எட்டி உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இந்திய அணி வாய்ப்பு

இந்திய அணி வாய்ப்பு

அவர் கடந்த ஆண்டு இந்திய அணியில் ஒரீரு போட்டிகளில் ஆடினாலும் அவரால் சரியாக ரன் குவிக்க முடியவில்லை. அதனால், மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளது.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இருந்து, பின் தன் இடத்தை கேஎல் ராகுலிடம் இழந்துள்ள இளம் வீரர் ரிஷப் பண்ட்டை நீக்கி விட்டு அவருக்கு பதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020 News in Tamil : IPL 2020 : Sanju Samson should be added in Indian team instead of Rishabh Pant asks fans
Story first published: Monday, September 28, 2020, 13:48 [IST]
Other articles published on Sep 28, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X