For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜடேஜாவுக்கு வாய்ப்பு இல்லையா? இந்தியாவின் ப்ளேயிங் 11ல் ஷர்துல் தாக்கூர்.. முன்னாள் வீரரின் யோசனை!

சவுத்தாம்டன்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் சரந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கி வருகிறது.

இதனால் இந்திய அணியின் ப்ளேயிங் 11 எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் தற்போது இருந்தே கணிக்க தெடங்கிவிட்டனர்.

 இங்கிலாந்து பிட்ச்

இங்கிலாந்து பிட்ச்

இந்தியாவில் பெரும்பாலும் பிட்ச்-கள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் இங்கிலாந்தில் அதற்கு முற்றிலும் மாறாக இருக்கும். வேகப்பந்துவீச்சுக்கு பெரிய அளவில் கைக்கொடுக்க கூடிய பிட்ச்-கள் ஆகும். இங்கி பந்தில் நல்ல வேகமும், ஸ்விங்கும் இருக்கும் என்பதால் ஸ்பின்னர்கள் பெரிய அளவில் விக்கெட்கள் கிடைப்பதில் சந்தேகமே.

இந்தியாவின் பவுலிங்

இந்தியாவின் பவுலிங்

போட்டி நடைபெறும் நாளன்று வெயில் சற்று இருந்தால், பிட்ச் வரண்டு காணப்படும். அப்போது ஸ்பின்னர்கள் சற்று விக்கெட் எடுக்க வாய்ப்புகள் உண்டு. எனவே இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் அஸ்வின் - ஜடேஜா என 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க திட்டமிட்டு வருகிறது. அஸ்வின் இடதுகை வீரர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியவர். அதே போல ஜடேஜா லோயர் ஆர்டரில் பேட்டிங்கிற்கு உதவுவார். இதனால் இவர்களின் இடங்களை இந்திய அணி நிர்வாகம் உறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

 4 வேகப்பந்துவீச்சாளர்கள்

4 வேகப்பந்துவீச்சாளர்கள்

இந்நிலையில் இந்திய அணியில் ஜடேஜா உட்காரவைக்கப்படலாம் என முன்னாள் வீரர் சரந்தீப் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், போட்டியன்று பிட்ச் எதிர்பார்த்ததை போன்று இல்லையென்றால் இந்தியா 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டு. இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஏற்கனவே உள்ள சூழலில் 4வது பவுலராக ஷர்துல் தாக்கூரை எடுத்துக்கொள்ளலாம்.

ஷர்துல் தாக்கூர் வேண்டும்

ஷர்துல் தாக்கூர் வேண்டும்

சவுத்தாம்டனில் பந்து நன்கு ஸ்விங் ஆகும். அப்படி பார்த்தால் ஷர்துல் தாக்கூர் ஸ்விங்கிங்கில் சிறப்பாக செயல்படக்கூடியவர்.. அதே போல பேட்டிங்கில் 7வது விக்கெட்டிற்கு கூட களமிறங்கி ஷர்துல் தாக்கூர் உதவுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் ஷர்துல் தாக்கூர் அரைசதம் ( 67) அடித்து அசத்தினார். அதே போல வாஷிங்டன் சுந்தருடன் இணைந்த் 7வது விக்கெட்டிற்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். எனவே அணியில் 4வதாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை சேர்த்தால் அது ஷர்துல் தாக்கூராக இருக்க வேண்டும் என சரந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, June 11, 2021, 21:00 [IST]
Other articles published on Jun 11, 2021
English summary
Former Player Sarandeep Singh Gives a Suggestion that Shardul Thakur to make it to India’s playing XI in WTC final against New Zealand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X