For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் மகன் அர்ஜூன் தான் லக்கி..சிறு வயதில் புலம்பிய சர்பிராஸ் கான்..பிறகு உண்மையை புரிஞ்சிகிட்டாரு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும் தற்போது அனைத்து ரசிகர்களின் மனதிலும் நிறைந்து நிற்கும் வீரர் என்றால் அது சர்பிராஸ்கான் தான்.

காரணம் ரஞ்சி கிரிக்கெட்டில் தொடர்ந்து சதம் சதமாக சர்பராஸ் கான் விளாசி வந்தாலும் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு குழுவினர் இடம் தரவில்லை.

இதனால் மனம் தளராத சர்பிராஸ்கான் மீண்டும் ரஞ்சி கிரிக்கெட்டில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

யார் சிறந்த பேட்ஸ்மேன்? சச்சினா? விராட் கோலியா? கபில்தேவ் சொன்ன பளிச் பதில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? சச்சினா? விராட் கோலியா? கபில்தேவ் சொன்ன பளிச் பதில்

ஏழ்மை குடும்பம்

ஏழ்மை குடும்பம்

இதன் மூலம் டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்துள்ள வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார். இந்த நிலையில் தந்தை நவ்ஷாத் ,சர்பிராஸ்கான் குறித்து அளித்துள்ள பேட்டி ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. சர்பிராஸ்கான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பும் மற்றும் திறமை மூலம் மும்பை அணிக்காக விளையாடியவர்.

அர்ஜூன் அதிர்ஷ்ட்சாலி

அர்ஜூன் அதிர்ஷ்ட்சாலி

சொல்லப்போனால் சர்பிராஸ்கானும் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுக்கரும் ஒரே வயதில் தான் கிரிக்கெட் போட்டியில் தொடங்கினார்கள். ஒன்றாகவே விளையாடி இருக்கிறார்கள். அப்போது சர்பிராஸ்கான் தனது தந்தையிடம் கூறியதை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் என்னை விட சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தான் அதிர்ஷ்டசாலி என்று கூறி இருக்கிறார்.

கட்டி அணைத்த சர்பிராஸ்

கட்டி அணைத்த சர்பிராஸ்

அவரிடம் தான் கார் ,பைக், மொபைல் ஐபாட் போன்ற விலை உயர்ந்த பொருள்கள் இருப்பதாகவும் என்னிடம் ஒன்றுமே இல்லை என்றும் அவர் சிறுவயதாக இருக்கும் போது வேதனை தெரிவித்து இருக்கிறார். பிறகு சிறிது காலம் சென்றவுடன் மீண்டும் தனது தந்தையிடம் சர்பிராஸ்கான் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்போது தான் தவறாக நினைத்து விட்டேன் என்றும் அர்ஜுன் டெண்டுல்கரை விட நான் தான் அதிர்ஷ்டசாலி.

நவ்ஷாத் கருத்து

நவ்ஷாத் கருத்து

ஏனென்றால் சச்சினால் தனது மகனிடம் எந்த நேரத்தையும் செலவழிக்க முடியாதுm ஆனால் எனது தந்தை எனக்காக கூடவே இருக்கிறார் என்று கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தந்தை நவுஷாத் கூறியுள்ளார். தாம் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஸப்ராஸ்கானின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தம்மால் முடிந்ததை செய்தேன் என்று தந்தை நவுஷாத் கூறியிருக்கிறார்.

Story first published: Sunday, January 22, 2023, 21:00 [IST]
Other articles published on Jan 22, 2023
English summary
Sarfaraz khan father interview about how his son deals family struggle சச்சின் மகன் அர்ஜூன் தான் லக்கி..சிறு வயதில் புலம்பிய சர்பிராஸ் கான்..பிறகு உண்மையை புரிஞ்சிகிட்டாரு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X