For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தெரியாம பேசிட்டேன்.. மன்னிச்சுருங்க.. தென்னாப்பிரிக்க வீரரிடம் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் கேப்டன்

Recommended Video

தென்னாப்பிரிக்க வீரரிடம் மன்னிப்பு கேட்ட சர்ப்ராஸ் அஹ்மது- வீடியோ

டர்பன் : தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடருக்கு பின் ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் ஆண்டில் பெலுக்வாயோ-வை பார்த்து பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது இன ரீதியாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் சர்ப்ராஸ்.

இன ரீதியிலான பேச்சு

இன ரீதியிலான பேச்சு

இரண்டாவது ஒருநாள் போட்டியின் 37வது ஓவரில் பெலுக்வாயோ வெற்றிக்கு தேவையான கடைசி ரன்களை அடித்தார். தோல்வியால் வெறுப்பில் இருந்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது, ஆப்ரிக்க இனத்தை சேர்ந்த பெலுக்வாயோவை "கறுப்பர்" என கூறி பேசினார்.

எதிர்வினையால் அழுத்தம்

எதிர்வினையால் அழுத்தம்

இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதை கேட்ட பலரும் இணையத்தில் சர்ப்ராஸ் அஹ்மதுக்கு எதிர்வினை ஆற்றினர். பாகிஸ்தான் கேப்டன் இனரீதியில் பேசினார் என்ற செய்தி பரவியதால், அழுத்தத்தில் சிக்கிய சர்ப்ராஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

தண்டனை கிடைக்குமா?

தண்டனை கிடைக்குமா?

சர்ப்ராஸ் அஹ்மது தன் பேச்சு யாரையும் துன்புறுத்தும் நோக்கி கூறப்படவில்லை என கூறி மன்னிப்பு கோரியுள்ளார். மன்னிப்பு கேட்டாலும், ஐசிசி விதிகளின் படி தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் சமன்

தொடர் சமன்

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

Story first published: Thursday, January 24, 2019, 13:55 [IST]
Other articles published on Jan 24, 2019
English summary
Pakistan Captain Sarfraz Ahmed apologises for his racist comments against Andile Phehlukwayo
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X