For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாத்துட்டே இருங்க… உலக கோப்பையில் இந்தியாவை ஓட, ஓட விரட்டுவோம்… பாக். கேப்டன் சர்பராஸ் சபதம்

இஸ்லாமாபாத்: உலக கோப்பையில் இந்திய அணியை கட்டாயம் வீழ்த்தியே தீருவோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது சூளுரைத்து உள்ளார்.

2019ம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற இருக்கிறது. மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு முதல் முறையாக ஏ, பி, சி என்ற பிரிவுகளின் அடிப்படையில் இல்லாமல் ஒரே பிரிவாக, அதாவது ரவுண்ட் ராபின் என்ற முறையில் போட்டிகள் நடக்க இருக்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளை ஒருமுறையாவது எதிர்கொண்டு ஆடும். புள்ளி பட்டியலின் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இந்த முறையில் இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கான 15 பேர் கொண்ட உலக கோப்பை அணியை அறிவித்துவிட்டன.

நல்ல நேரத்துல கேட்ச்சை விட்டுட்டாரு.. பேட்டிங்கும் சரியில்லை.. இவரை ஏங்க டீம்ல எடுத்தீங்க!! நல்ல நேரத்துல கேட்ச்சை விட்டுட்டாரு.. பேட்டிங்கும் சரியில்லை.. இவரை ஏங்க டீம்ல எடுத்தீங்க!!

சுவாரசியம்

சுவாரசியம்

உலக அளவில் எங்கு எந்த போட்டி நடந்தாலும் கிரிக்கெட்டுக்கு என்று தனி மவுசு இருக்கிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் என்றால் அது தனி ரகம். குறிப்பாக பாகிஸ்தானுடன் மோதுகிறது என்றால் அது ஏக சுவாரஸ்யம். நடப்பு உலக கோப்பை தொடரிலும் இந்த இரு அணிகளும் மோதுகின்றன.

பரபரப்பான போட்டி

பரபரப்பான போட்டி

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான மோதல் அனைவரும் தெரிந்ததது. வரும் உலக கோப்பையில் இரு அணிகள் மோதும் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து என்று கூறலாம். காரணம், அந்த அளவிற்கு போட்டியில் பரபரப்பு இருக்கும். உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் ஒருபோதும் வீழ்த்தியதே இல்லை.

சர்பராஸ் கருத்து

சர்பராஸ் கருத்து

இந்த முறையும் வீழ்த்த இந்தியா தயாராக உள்ளது. இந் நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:இந்த முறை உலக கோப்பையில் இந்திய அணியை கட்டாயம் வீழ்த்துவோம். சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி எப்படி வீழ்த்தியது என்பதை அனைவரக்கும் தெரிந்திருக்கும்.

தோற்கடிப்போம்

தோற்கடிப்போம்

அதே போல உலக கோப்பையில் நடக்கும் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்துவோம். நான் வெளியில் எங்கு சென்றாலும் ரசிகர்கள் தொடர்ந்து கேட்கும் ஒரே கேள்வி, இந்த உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்துவீர்கள் தானே என்பதுதான். ரசிகர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். அதை மனதில் கொண்டு சிறப்பாக ஆடி வெற்றி பெறுவோம் என்றார்.

Story first published: Sunday, May 5, 2019, 10:55 [IST]
Other articles published on May 5, 2019
English summary
Sarfraz Ahmed Buyoant of Beating India for the First Time in World Cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X