29 வயதில் மாரடைப்பு.. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக பார்க்கப்பட்டவர் உயிரிழப்பு..ரசிகர்கள் சோகம்

அமீரகம்: இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

14வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள செய்தி ஒன்று ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இடியாய் வந்து விழுந்துள்ளது.

பாண்ட்யாவுக்கு மாற்றாக 3 வீரர்கள்.. முக்கிய முடிவை எடுத்த பிசிசிஐ.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி! பாண்ட்யாவுக்கு மாற்றாக 3 வீரர்கள்.. முக்கிய முடிவை எடுத்த பிசிசிஐ.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

வீரர் உயிரழப்பு

வீரர் உயிரழப்பு

சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தவர் அவி பரோட். 29 வயதே ஆகும் இவர் மாரடைப்பால் காலமானார். 19-வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டனான திகழ்ந்தவர் அவி பரோட். இதுமட்டுமல்லாமல் ராஞ்சி கோப்பை தொடரில் 2019 -20 சீசனில் சவுராஷ்ட்ரா அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

 எதிர்காலமாய் பார்க்கப்பட்டவர்

எதிர்காலமாய் பார்க்கப்பட்டவர்

அவி பரோட் 38 முதல் தர போட்டிகளில் விளையாடியவர். சவுராஷ்டிராவுக்காக 21 ரஞ்சி கோப்பை போட்டிகள், 17 ஏ பிரிவு போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் சையத் முஷ்டாக் அலி ட்ராஃபியில் 53 பந்துகளில் 122 ரன்களை அடித்தார். விரைவில் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

பல விளையாட்டு வீரர்கள் சமீப வருடங்களில் மாரடைப்பால் இளம் வயதிலேயே உயிரிழப்பது தொடர்கதை ஆகி வருகிறது. இதற்கு விளையாட்டு வீரர்களின் மன அழுத்தம் காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தான் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தொடர் விளையாட்டுகளில் இருந்து திடீரென ஓய்வு எடுத்துக்கொண்டார்.

கிரிக்கெட் வாரியம் இரங்கல்

கிரிக்கெட் வாரியம் இரங்கல்

21 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியுள்ள அவி பரோட் மரணம், அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் அவரது ஆன்மா சாந்தியடையை எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாகவும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Saurashtra batsman Avi Barot dies due to heart attack at the age of 29
Story first published: Saturday, October 16, 2021, 13:54 [IST]
Other articles published on Oct 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X