For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நன்கொடை குழுவில் இணைந்தது சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம்... ரூ.42 லட்சம் நன்கொடை அறிவிப்பு

காந்திநகர் : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நன்கொடைகள் அளித்துவரும் நிலையில் சௌராஷ்டிர கிரிக்கெட் சங்கம் 42 லட்சம் ரூபாய் நன்கொடை அறிவித்துள்ளது.

பிரதமர் நிவாரண நிதி மற்றும் குஜராத் மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா 21 லட்சம் ரூபாய் அளிக்கவுள்ளதாக சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஜெய்தேவ் ஷா மற்றும் செயலாளர் ஹிமான்சூ ஷா ஆகியோர் இந்த அறிவிப்பை கூட்டாக அறிவித்துள்ளனர்.

SCA joins list of state Cricket bodies to Donate for Coronavirus Fight

சர்வதேச அளவில் பெருமளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 24,000ஐ தாண்டியுள்ளது. இந்தியாவிலும் வைரஸ் தாக்கத்தால் 724 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர்.

பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலியும் இந்த இக்கட்டான நேரத்தில் தங்களது உதவிகளை அறிவித்துள்ளனர். இந்நிலையில், சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் 42 லட்சம் ரூபாய் நன்கொடையை அறிவித்துள்ளது. பிரதமர் நிவாரண நிதிக்கு 21 லட்சம் ரூபாயும் குஜராத் மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 21 லட்சம் ரூபாய் என சௌராஷ்டிர கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் மக்கள் நலனில் அக்கறையுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சௌராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஜெய்தேவ் ஷா மற்றும் செயலாளர் ஹிமான்சூ ஷா ஆகியோர் இந்த அறிவிப்பை கூட்டாக அறிவித்துள்ளனர். இதனிடையே பிசிசிஐ மற்றும் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் நிரஞ்சன் ஷா, மக்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Friday, March 27, 2020, 18:21 [IST]
Other articles published on Mar 27, 2020
English summary
Saurashtra Cricket Association has all care & concern for citizens of India: Statement
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X