அந்த குட்டி பையனை உடனே டீம்ல எடுங்க.. பவுலிங் அசுரன் வாசிம் அக்ரமை மயக்கிய சிறுவன்!

அந்த குட்டி பையனை உடனே டீம்ல எடுங்க..வீடியோ

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிறுவன் ஒருவன் வீசிய பவுலிங் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமை கவர்ந்து இருக்கிறது. இதுகுறித்து அவர் டிவிட் போட்டு இருக்கிறார்.

இந்திய அணியில் சச்சின், டிராவிட், கங்குலி எப்படி மாஸ் காட்டிக் கொண்டு இருந்தார்களோ அப்போது பாகிஸ்தான் அணியில் வாசிம் அக்ரம் கலக்கிக் கொண்டு இருந்தார். இந்திய வீரர்களும் ஐவரும் இப்போதும் நட்பாக இருக்கிறார்கள்.

இவர் வேகப்பந்தை சமாளிக்கவே பலர் தனியாக பயிற்சி எடுத்தார்கள். அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ பாகிஸ்தானின் வேகப்பந்து வரலாற்றை மீண்டும் நியாபகப்படுத்துகிறது.

விடைபெற்ற நாள்

விடைபெற்ற நாள்

வாசிம் அக்ரம் 2002ல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றார். அதற்கு அடுத்த வருடமே ஒருநாள் போட்டியில் இருந்தும் ஒய்வு பெற்றார். பலரும் எதிர்பார்க்காமல் நடந்த இந்த நிகழ்வு காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருந்தார்கள்.

டிவிட் செய்தார்

இந்த நிலையில் வாசிம் அக்ரம் டிவிட்டரில் ''யார் இந்த சிறுவன். நம்முடைய நாட்டு மக்களின் ரத்தத்தில் நிறைய திறமை இருக்கிறது. இவர்களை கண்டுபிடிக்க சரியான தளம் அமைக்க வேண்டும். இதற்காக நாம் இப்போதே ஏதாவது செய்ய வேண்டும்'' என்று சிறுவன் ஒருவனை அணியில் எடுக்க சொல்லும் அளவிற்கு டிவிட் செய்து பாராட்டி இருக்கிறார்.

வைரல் வீடியோ

அவர் ஒரு வைரல் வீடியோவை ஷேர் செய்து இருந்தார். அதில் சிறுவன் ஒருவன் வாசிம் அக்ரம் போலவே சிறப்பாக பந்து வீசுகிறான். சரியாக ஸ்டம்பில் வேகமாக பந்தை வீசுகிறான். அதுவும் இடது கையில், கையை மடக்காமல் போட்டு இருக்கிறான்.

இந்தியர் பதில்

இதற்கு இந்தியர் ஒருவர் பதில் அளித்துள்ளார். அதில் ''சூப்பர், திறமையான சிறுவன். அவனின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும். அந்த சிறுவன் எதிர்காலத்தில் டிவியில் வர வேண்டும். வாசிம் அக்ரம் கண்டிப்பாக சந்தோஷப்படுவார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
A Pakistan school Kid stuns Wasim Akram with his bowling.
Story first published: Thursday, March 1, 2018, 12:51 [IST]
Other articles published on Mar 1, 2018
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X