For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனிமே நானும் பேர்ஸ்டோவும்தான் சிறப்பா ஆடணும் போல இருக்கு... வேற வழி இல்ல... வார்னர் ஆதங்கம்

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டி சென்னையில் நடைபெற்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங்கை அளித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணியின் பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து 67 ரன்களை குவித்த நிலையிலும் அடுத்து வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை தர தவறினர்.

சன்ரைசர்ஸ் தோல்வி

சன்ரைசர்ஸ் தோல்வி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 150 ரன்களை அடித்த நிலையில், சன்ரைசர்ஸ் அணி இந்த ஸ்கோரை சேஸ் செய்ய முடியாமல் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பேட்டிங் தேர்வு

பேட்டிங் தேர்வு

கடந்த சில போட்டிகளில் டாஸ் வென்ற அணிகள் பீல்டிங்கையே தேர்வு செய்தன. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்ற நிலையில், அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்களை அடித்திருந்தது.

சன்ரைசர்ஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப்

சன்ரைசர்ஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப்

நேற்றைய போட்டியில் பனிப்பொழிவு சிறப்பான பங்கை வகித்திருந்தது. இரண்டாவதாக ஆடும் அணிக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தாலேயே ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். ஆயினும் இரண்டாவதாக ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

டேவிட் வார்னர் ஏமாற்றம்

டேவிட் வார்னர் ஏமாற்றம்

இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 67 ரன்களை குவித்தனர். ஆயினும் அடுத்தடுத்து விளையாடிய மணீஷ் பாண்டே, விராட் சிங், அபிஷேக் சர்மா உள்ளிட்ட வீரர்கள் ஏமாற்றத்தை அளித்தனர். இந்நிலையில் அணியின் வீரர்களின் ஆட்டம் அதிருப்தி மற்றும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

சேஸ் செய்யக்கூடியது தான்

சேஸ் செய்யக்கூடியது தான்

மும்பை இந்தியன்ஸ் அணியின் இலக்கு நிச்சயமாக சேஸ் செய்யக்கூடியது தான் என்றும் ஆனால் மிடில் ஆர்டரில் விளையாடிய வீரர்கள் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். ஆனால் நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் அணியின் பௌலர்கள் சிறப்பாக பந்து வீசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

ஐபிஎல் 2021 தொடரின் முதல் 3 போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் தானும் பேர்ஸ்டோவும் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Sunday, April 18, 2021, 11:15 [IST]
Other articles published on Apr 18, 2021
English summary
You have to learn from mistakes and right now it is just the batsmen -David Warner
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X