For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

13 வருட ஆளுமை.. விட்டுக் கொடுக்காத ரசிகன்.. நெருங்க முடியாத CSK-வின் வெற்றிப் பயணம்!

சென்னை: 'Bonding' என்ற ஒரு அற்புதமான சொல் ஆங்கிலத்தில் உள்ளது. அதை தமிழில் அப்படியே டிரான்ஸ்லேட் செய்தால் 'பிணைப்பு' என்று சொல்லலாம். ஆனால், அதன் உள்ளார்ந்த அர்த்தம் 'ஆத்மார்த்தமான பிணைப்பு'. அப்படியொரு பிணைப்பு தான், நெருக்கம் மஞ்சள் மேகத்துக்கும், ரசிகர்களுக்கும்.

ஆம்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தான் சொல்கிறேன். ஒரு ரயில் எவ்வளவு தான் விரைவாக சென்றாலும், ஒரு நாளும் அதன் பெட்டிகளால், அந்த ரயில் எஞ்சினின் பெட்டிகளை விஞ்சிவிட முடியாது.

கொரோனா பாதித்தால்.. தனி ஃபிளைட் கிடையாது.. இங்கிலாந்து டூரை மறந்துடுங்க - பிசிசிஐ கெடுபுடிகொரோனா பாதித்தால்.. தனி ஃபிளைட் கிடையாது.. இங்கிலாந்து டூரை மறந்துடுங்க - பிசிசிஐ கெடுபுடி

அப்படி, ஐபிஎல் எனும் எக்ஸ்பிரஸின் பெட்டிகளாக மற்ற அணிகள் இருந்தாலும், என்ஜினாக இருப்பது என்னவோ சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.

 அன்பை அளவிட

அன்பை அளவிட

காரணம், பிராண்ட் வேல்யூ போன்ற மாயையும் மீறி, ரசிகன் அந்த அணியின் மீது செலுத்தும் வட்டியில்லாத அன்பு. ஒருவன் தமிழ் ரசிகன் என்றால், அது சினிமா ரசிகனாக இருந்தாலும் சரி.. கிரிக்கெட் ரசிகனாக இருந்தாலும் சரி.. அல்லது தனிப்பட்ட நபரின் ரசிகனாக இருந்தாலும் சரி.. அவன் வைக்கும் அன்பை அளக்க இதுவரை எந்த சாதனமும் கண்டறியப்படவில்லை. தான் நேசிக்கும் ஒன்றின் மீது அவன் மிகத் தீவிரமாக 'கனெக்ட்' ஆகிவிடுகிறான். அந்த கனெக்டிவிட்டி ஒருக்கட்டத்தில் வெறித்தனமாக உருமாறும் பொழுது, இடியே விழுந்தாலும், அவனது நேசத்தை அசைத்துப் பார்க்க முடியாது.

 தி பெஸ்ட்

தி பெஸ்ட்

அப்படியொரு கனெக்ட்டிவிட்டி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் எனும் பிராண்ட் உடனானது. ரசிகன் எட்டடி பாய்ந்தால், சிஎஸ்கே நிர்வாகம் 16 அடி பாய்வதில் ஜித்து. ரசிகர்களின் தேவை, எண்ணம், விருப்பம், ஆர்வம் போன்றவற்றை அவர்களைவிட நன்றாகவே தெரிந்து வைத்து அதற்கேற்ப செயல்படுவதில் சிஎஸ்கே 'தி பெஸ்ட்' Franchise எனலாம்.

 சாதாரண வேலை அல்ல

சாதாரண வேலை அல்ல

2018ம் ஆண்டு, சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து ரசிகர்களை புனே அழைத்துச் சென்ற ஒரு சான்று போதும், ரசிகனுக்கு சிஎஸ்கே நிர்வாகம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அறிய. ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து, அதில் ரசிகர்களை தேர்வு செய்து, அவர்களை போட்டி நடக்கும் ஊரில் தங்கவைத்து, மூன்று வேளை சாப்பாடு கொடுத்து, மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவது என்ற இந்த 'அரேஞ்மெண்ட்' சாதாரண வேலை அல்ல. அது சிஎஸ்கே நிர்வாகம் செய்ய வேண்டிய அவசியமும் அல்ல. ஆனால், செய்தது. ரசிகனை மகிழ்வித்தது. இரண்டு ஆண்டு தடைக் காலத்துக்கு பிறகு, மீண்டும் களமிறங்கிய தங்கள் அணியை கொண்டாட எண்ணிய ரசிகனின் விருப்பத்தை ரிஸ்க் எடுத்து பூர்த்தி செய்தது.

 இதுவே காரணம்

இதுவே காரணம்

ஆனால், மேற்சொன்ன காரணங்கள் அனைத்தையும் விட, மிக மிக சென்ஸிட்டிவான அணுகுமுறை ஒன்றை நீங்கள் சிஎஸ்கே நிர்வாகத்தில் காணலாம். இன்னும் சொல்லப்போனால, இத்தனை ஆண்டுகால சிஎஸ்கேவின் Consistent Success Rate-க்கு முதன்மை காரணமே இது தான். அது, 'வீரர்களின் 'Insecurity' எண்ணத்தை அடியோடு காலி செய்வது. ஆம்! சிஎஸ்கே அணியின் டிராவலை ஆரம்பத்தில் இருந்து கவனித்து வருபவர்களுக்கு இது புரியும். சிஎஸ்கே அணிக்காக தேர்வாகும் வீரர்களை, அவ்வளவு சீக்கிரம் அடுத்தடுத்த தொடர்களில் நிர்வாகம் நீக்காது. குறிப்பாக, பிளேயிங் லெவனில் இடம்பிடித்து, அணிக்காக சிறப்பாக விளையாடுபவர்களை எந்த சீசனிலும் சிஎஸ்கே மாற்றாது.

 இன்ஸ்டன்ட் எனர்ஜி

இன்ஸ்டன்ட் எனர்ஜி

'Family Atmosphere'-ஐ உருவாக்குவது தான் சிஎஸ்கேவின் ஸ்டிராடஜி. மிக முக்கியமாக தோனியின் ஸ்டிராடஜியும் கூட. பிஸ்னஸ், Auction, ரெவென்யூ எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அந்த எதார்த்தத்தை மறுக்க முடியாது என்றாலும், முடிந்த அளவுக்கு தனது வீரர்களை சேஃப் மோடில் வைத்திருக்க முயற்சிக்கும். இதனால், வீரர்களின் மனதில் எழும் பாதுகாப்பான சூழல், அணியின் வலிமையை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல், தேவைப்படும் நேரத்தில் களத்தில் சூறாவளியாய் சுழல்வதற்கான 'இன்ஸ்டன்ட் எனர்ஜி'யையும் கொடுக்கிறது. ரெய்னா, ஜடேஜா, தோனி, பிராவோ என்று இந்த லிஸ்ட் நீளும்.

 எம் எஸ் தோனி

எம் எஸ் தோனி

எல்லாவற்றுக்கும் மேலாக, மேலே நாம் பேசிய அனைத்து கனெக்டிவிட்டிகளுக்கும் ஒரே பாசிட்டிவிட்டியாக இருப்பது நம் கேப்டன் மகேந்திர சிங் தோனி. சிஎஸ்கே-வின் கூட்டுக் குடும்ப பார்முலாவுக்கு அடித்தளமிட்டு, பெரிதாக பிளேயர்ஸ் ரொட்டேஷன் இல்லையென்றாலும், வீரர்கள் மனதில் சேஃப் எண்ணத்தை விதைத்து, கூடுதலாக டிப்ஸ்-களையும் அள்ளித் தெளித்து இன்று சிஎஸ்கேவை கம்பீரமாக நிற்க வைத்திருப்பது தோனி என்றால் அது மிகையாகாது.

 குறுக்கே வந்த கவுஷிக்

குறுக்கே வந்த கவுஷிக்

உணர்வுகளுடன் எளிதாக கனெக்ட் ஆகும் தமிழ் ரசிகர்கள், அவர்களை மதிக்கும் நிர்வாகம், இவை இரண்டிற்கும் பாஸிட்டிவிட்டி கொடுக்கும் ஒற்றைத் தலைவன் என்பதே சிஎஸ்கே எனும் எக்ஸ்பிரஸ் எஞ்சினின் அசைக்க முடியா வெற்றி ஃபார்முலா. 2020-ல் வண்டி கொஞ்சம் சறுக்கினாலும், 2021ல் அதகளம் புரிந்த நிலையில், 'குறுக்க இந்த கவுஷிக் வந்தா' மோடில் கொரோனா வந்து எக்ஸ்பிரஸ் இயக்கத்துக்கு கேட் போட்டுவிட்டது.

Story first published: Tuesday, May 11, 2021, 18:52 [IST]
Other articles published on May 11, 2021
English summary
secret behind consistent success rate of csk - ஐபிஎல் 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X