நிறைய வீரர்களை பார்த்திருக்கேன்... சச்சின் தான் பூரணமானவர்... கவாஸ்கர் பாராட்டு

மும்பை : தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் பல வீரர்களை பார்த்துள்ளதாகவும் ஆனால் சச்சின் டெண்டுல்கரை போன்ற பூரணமான வீரர் யாரும் இல்லை என்றும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு எல்லாமே அத்துபடியாக இருந்ததாகவும் அவர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தலைமை பண்புகள், நிலைத்தன்மை போன்றவற்றை கொண்டு தன்னுடைய ஆட்டத்தில் சச்சின் முன்னேறி சென்றதாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 24 வருட கிரிக்கெட் கேரியரில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். கடந்த 2013ல் ஓய்வு அறிவித்த அவர், 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த இரு வடிவங்களிலும் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை தற்போதும் இவர் வசம் உள்ளது.

இந்நிலையில் தன்னுடைய கேரியரில் தான் பல திறமைமிக்க வலிமையான வீரர்களை சந்தித்துள்ளதாகவும் அவர்களில் யாரும் சச்சின் டெண்டுல்கரை போல முழுமையான வீரராக இல்லை என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரிடம் உள்ள தலைமைப் பண்புகள் மற்றும் நிலைத்தன்மையை கொண்டு அவர் தன்னுடைய கேரியரில் முன்னேறி நடைபோட்டதாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
I’ve seen many terrific batsmen but nobody had came close to batting perfection like Sachin Tendulkar -Gavaskar
Story first published: Friday, August 28, 2020, 15:09 [IST]
Other articles published on Aug 28, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X